கிருஷ்ண ஜெயந்தி: இந்த ராசிக்காரர்கள் இப்படி கண்ணனை வழிபடலாம்!

செய்திகள் ஜோதிடம் விழாக்கள் விசேஷங்கள்
krishnan
krishnan

கிருஷ்ணரை கிருஷ்ண ஜெயந்தி அன்று வழிபடுவது கூடுதல் சிறப்பானது. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபட்டால் கிருஷ்ணர் தன் பூரண அருளை வழங்குவதோடு அவர்களுக்கு ஏற்படும் அனைத்து சோதனைகளில் இருந்தும் பாதுகாப்பார் மேலும் அவர்களை சுற்றியுள்ள தீயசக்திகள் மற்றும் எதிர்மறை சக்திகளை விரட்டுவார்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதைக்கு நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். கிருஷ்ணருக்கு சிவப்பு சந்தனம் வைத்து வழிபடுவது அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை அதிகரிக்கும், மேலும் கிருஷ்ணருக்கு பாலால் ஆன பலகாரங்கள், தேங்காயால் செய்யப்பட்ட பலகாரங்களைப் படைக்க வேண்டும். அதோடு இந்த ராசிக்காரர்கள் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும். மாதுளை, லட்டு கிருஷ்ணருக்கு பிரசாதமாக பயன்படுத்துவது எல்லா முயற்சிகளிலும் வெற்றியைத் தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, ரசகுல்லா, பேடா போன்ற பாலில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களை கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் கமல்கட்டா ஜபமாலையைப் பயன்படுத்தி பதினோரு முறை ‘ஸ்ரீ ராதா கிருஷ்ண சரணம் மாம்’ மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் கிருஷ்ணரின் அருளால் நிறைவேறும். குழந்தையில்லா ரிஷப ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயநதி அன்று சந்தனம் வைத்து வழிபடுவது அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அளிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பாலால் கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். துளசி வைத்து வழிபடுவது உங்களுக்கு நீண்ட ஆரோக்கியத்தை வழங்கும். மேலும் இவர்கள் முந்திரியால் ஆன இனிப்புகள் மற்றும் ஐந்து பழங்களைப் படைக்க வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு வாழைப்பழத்தை வழங்க வேண்டும் மற்றும் துளசி அல்லது ஸ்படிக ஜபமாலையைப் பயன்படுத்தி ‘ஸ்ரீ ராதா கிருஷ்ணாயே நமோ ஸ்வாஹா’ என்ற மந்திரத்தை பதினோரு முறை உச்சரிக்க வேண்டும். நீங்கள் கிருஷ்ணருக்கு படைக்கும் பழங்களில் வாழைப்பழமும் இருக்க வேண்டும். இது உங்கள் மரியாதையை சமூகத்தில் அதிகரிக்க உதவும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு நீரால் அபிஷேகம் செய்து, பசும்பால் வைத்து கிருஷ்ணரை வழிபடுவது அவர்கள் வாழ்வில் அமைதியை வழங்கும். குங்குமப்பூவால் ஆன இனிப்புக்களை படைக்க வேண்டும். முக்கியமாக கோயா பர்பியை வழங்க வேண்டும். அதோடு ‘ஸ்ரீ ராதா வல்லபாய நமஹ’ என்ற மந்திரத்தை ஐந்து முறை சொல்ல வேண்டும். பழங்களில், நீங்கள் தேங்காய் வழங்க வேண்டும். இது வாழ்க்கையில் அமைதியையும் செழிப்பையும் பராமரிக்க உதவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கங்கை நீரில் தேன் சிறிது கலந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு கிருஷ்ணருக்கு வெல்லத்தைப் படைக்க வேண்டும். இப்படி செய்வது அனைத்து துறைகளிலும் வெற்றியை அடைய உதவும். மேலும் இவை எதிரிகளை வெல்ல உதவும் என்றும் நம்பப்படுகிறது. எதிரிகளின் தொல்லை நீங்க சிம்ம ராசிக்காரர்கள் உலோகத்தால் செய்யப்பட்ட புல்லாங்குழலை வைத்து வழிபடலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பாலில் நெய் கலந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் பால் மற்றும் உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட இனிப்புக்களை படைக்க வேண்டும். அதோடு, கிராம்பு, ஏலக்காய், துளசி இலைகள், வெற்றிலை மற்றும் பச்சை காய்கறிகளை கிருஷ்ணருக்கு வழங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது கிருஷ்ணரின் ஆசியுடன், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற உதவுகிறது. அனைத்து வேண்டுதல்களும் பலிக்க கன்னி ராசிக்காரர்கள் பச்சரிசி மாவும், நாட்டு சர்க்கரையும் வைத்து வழிபடவேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பாலில் சர்க்கரை சேர்த்து அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த ராசிக்காரர்கள் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்புக்களை வழங்க வேண்டும். மேலும் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும் அதோடு பாதாம் மற்றும் மக்கான் மிஸ்ரியை வழங்க வேண்டும். பழங்களில், ஒரு வாழைப்பழத்தை வழங்கலாம். இது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது. கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய் வைத்து வழிப்பட்டால் அவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் வெல்லத்தாலான இனிப்புக்களை கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும். ‘ஸ்ரீ ராதா கிருஷ்ணாய நமஹ’ என்ற மந்திரத்தை குறைந்தது ஐந்து முறையாவது சொல்ல வேண்டும். பழங்களில் தேங்காயை வழங்க வேண்டும். இது கிருஷ்ணரின் ஆசிகளைப் பெற உதவுவதோடு, விருப்பங்களை நிறைவேற்றவும் உதவும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுக கிருஷ்ணருக்கு தேன் வைத்து கிருஷ்ண ஜெயந்தி அன்று வழிபடுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு தேன் மற்றும் பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். இவர்கள் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்புக்களை படைக்க வேண்டும். ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை ஜபமாலையைப் பயன்படுத்தி ஐந்து முறை உச்சரிக்க வேண்டும். பழங்களில் வாழைப்பழத்தை வழங்க வேண்டும். இவை கிருஷ்ணனை மகிழ்வித்து, அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற உதவும். அதோடு இந்த ராசிக்காரர்கள் கொய்யாப்பழத்தை கிருஷ்ணருக்கு வழங்குவது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் ‘தேவகி சத் கோவிந்தாயே நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பழங்களில்்கருப்பு திராட்சையை படைக்க வேண்டும். அதோடு கிருஷ்ணருக்கு இனிப்பு பான் வழங்கலாம். இது கிருஷ்ணரின் ஆசியைப் பெற உதவி, எதிலும் வெற்றி அடைய உதவும். உங்கள் வேண்டுதல்கள் பலிக்க கிருஷ்ணருக்கு மயிலிறகுகளை வைத்து வணங்குங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பால் மற்றும் பஞ்சாமிர்தத்தைப் பயன்படுத்தி கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். கங்கை நீரை வைத்து கிருஷ்ணரை வழிபட வேண்டும். இவர்கள் நெய்வேத்தியமாக வைத்து வைத்து வணங்க வேண்டியது சப்போட்டா பழத்தை. மேலும் பாலால் தயாரிக்கப்பட்ட சிவப்பு நிறத்திலான இனிப்புக்களை படைக்க வேண்டும். ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரத்தை பதினோரு முறை உச்சரிக்க வேண்டும். மேலும் இவர்கள் கிருஷ்ணருக்கு முந்திரி மற்றும் பாதாம் போன்றவற்றை கிருஷ்ணருக்கு வழங்குவது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும் மற்றும் நெய் வைத்து கிருஷ்ணரை வழிபட வேண்டும். பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்புக்களை படைக்க வேண்டும். மேலும் ஐந்து பழங்களை கிருஷ்ணருக்கு வழங்க வேண்டும். ‘ஓம் தேவகி சத் கோவிந்தாய நம’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த ராசிக்காரர்கள் மற்ற பழங்களுடன் தேங்காயையும் வழங்கலாம். இது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்கும்.

Leave a Reply