திருவாய்மொழி

நம்மாழ்வார்

 

ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய

திருவாய்மொழி

ஸ்ரீ

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

திருவாய்மொழித் தனியன்கள்

நாதமுனிகள் அருளிச்செய்தது

 

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்

ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்

ஸஹஸ்fரசா கோபநிஷத்ஸமாகமம்

நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.

 

வெண்பாக்கள்

ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது

திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,

மருவினிய வண்பொருநல் என்றும், – அருமறைகள்

அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,

சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.

 

சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்

இனத்தாரை யல்லா திறைஞ்சேன், – தனத்தாலும்

ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,

பாதங்கள் யாமுடைய பற்று.

 

அனந்தாழ்வான் அருளிச்செய்த்து

ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்

வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், – ஆய்ந்தபெருஞ்ச்

சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,

பேராத வுள்ளம் பெற.

 

பட்டர் அருளிச்செய்தவை

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்

ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், – ஈன்ற

முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த

இதத்தாய் இராமுனுசன்.

 

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,

தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்,

ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,

யாழினிசை வேதத் தியல்.

 

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *