திருவாய்மொழி இரண்டாம் பத்து

நம்மாழ்வார்

 

 

2ஆம் பத்து 2ஆம் திருவாய்மொழி

2912

திண்ணன்வீடு முதல்முழுதுமாய்

எண்ணின்மீதிய னெம்பெருமான்

மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட நங்f

கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே. 2.2.1

 

2913

ஏபாவம்பரமே யேழுலகும்

ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்

மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்

கோபாலகோளரி யேறன்றியே. 2.2.2

 

2914

ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை

வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து

மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட

மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே. 2.2.3

 

2915

தேவுமெப் பொருளும்படைக்க

பூவில்நான் முகனைப்படைத்த

தேவனெம் பெருமானுக்கல்லால்

பூவும்பூசனையும் தகுமே. 2.2.4

 

2916

தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே

மிகும்தேவு மெப்பொருளும்படைக்க

தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்

மிகும்சோதி மேலறிவார்யவரே. 2.2.5

 

2917

யவரும்யாவையு மெல்லாப்பொருளும்

கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற

பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி

அவரெம் ஆழியம் பள்ளியாரே. 2.2.6

 

2918

பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்

வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்

உள்ளுளா ரறிவார் அவன்றன்

கள்ளமாய மனக்கருத்தே. 2.2.7

 

2919

கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்

வருத்தித்தமாயப் பிரானையன்றி ஆரே

திருத்தித்திண்ணிலை மூவுலகும் தம்முள்

இருத்திக்காக்கு மியல்வினரே. 2.2.8

 

2920

காக்குமியல்வினன் கண்ணபெருமான்

சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே

வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்

ஆக்கினான் தெய்வவுலகுகளே. 2.2.9

 

2921

கள்வா எம்மையு மேழுலகும் நின்

னுள்ளேதோற்றிய இறைவா. என்று

வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்

புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே. 2.2.10

 

2922

ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்

கூத்தனை குருகூர்ச்சடகோபன்சொல்

வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்

ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. 2.2.11

Leave a Reply