திருவாய்மொழி மூன்றாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

3ஆம் பத்து 7 ஆம் திருவாய்மொழி

3079

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை

பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை

பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்

பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே. (2) 3.7.1

 

3080

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை

தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை

தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்

நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே. 3.7.2

 

3081

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்

போதனை பொன்னெடுஞ் சக்கரத் தெந்தை பிரான்தன்னை

பாதம் பணியவல் லாரைப் பணியும் அவர்க்கண்டீர்

ஓதும் பிறப்பிடை தோறெம்மை யாளுடை யார்களே. 3.7.3

 

3082

உடையார்ந்த வாடையன் கண்டிகையன்உ டை நாணினன்

புடையார்ப்பொன் னூலினன் பொன்முடியன்மற்றும் பல்கலன்

நடையா வுடைத்திரு நாரணன்தொண்டர்தொண் டர்க்கண்டீர்

இடையார் பிறப்பிடை தோறெமக்கெம்பெரு மக்களே. 3.7.4

 

3083

பெருமக்க ளுள்ளவர் தம்பெருமானை அமரர்கட்

கருமை யொழியஅன் றாரமுதூட்டிய அப்பனை

பெருமை பிதற்றவல் லாரைப்பிதற்றும் அவர்க்கண்டீர்

வருமையு மிம்மையும் நம்மையளிக்கும் பிராக்களே. 3.7.5

 

3084

அளிக்கும் பரமனை கண்ணனைஆழிப் பிரான்தன்னை

துளிக்கும் நறுங்கண்ணித் தூமணிவண்ணனெம் மான்தன்னை

ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக்கொள்ளும் அவர்க்கண்டீர்

சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன்மாந்தரங் காப்பரே. 3.7.6

 

3085

சன்மசன் மாந்தரங் காத்தடியார்களைக் கொண்டுபோய்

தன்மை பொறுத்தித்தன் தாளிணைக்கீழ்க்கொள்ளும் அப்பனை

தொன்மை பிதற்றவல் லாறைப்பிதற்றும் அவர்கண்டீர்

நம்மை பெறுத்தெம்மை நாளுய்யக்கொள்கின்ற நம்பரே. 3.7.7

 

3086

நம்பனை ஞாலம் படைத்தவனைதிரு மார்பனை

உம்பர் உலகினில் யார்க்கும்உணர்வரி யான்தன்னைக்

கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர்கண்டீர்

எம்பல் பிறப்பிடை தோறெம்தொழுகுலம் தாங்களே. 3.7.8

 

3087

குவலந்தாங்கு சாதிகள் நாலிலும்கீழிழிந்து எத்தனை

நலந்தா னிலாதசண் டாளசண்டாளர்க ளாகிலும்

வலந்தாங்கு சக்கரத் தண்ணல்மணிவண்ணற் காளென்றுள்

கலந்தார் அடியார் தம்மடியாரெம் மடிகளே. 3.7.9

 

3088

அடியார்ந்த வையமுண் டாலிலையன்ன சஞ்செய்யும்

படியாது மில்குழ விப்படியெந்தைபி ரான்றனக்கு

அடியார் அடியார் தமடியார்அ டி யார்தமக்

கடியார் அடியார் தம்அடியாரடி யோங்களே. 3.7.10

 

3089

அடியோங்கு நூற்றவர் வீயஅன்றைவருக் கருள்செய்த

நெடியோனை தென்குரு கூர்ச்சடகோபன்குற் றேவல்கள்

அடியார்ந்த ஆயிரத் துள்ளிவைபத்தவன் தொண்டர்மேல்

முடிவுஆரக் கற்கில் சன்மம்செய்யாமை முடியுமே. (2) 3.7.11

Leave a Reply