திருவாய்மொழி ஒன்பதாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

9ஆம் பத்து 5ஆம் திருவாய்மொழி

3717

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டுயிங் கெத்தனை,

என்னுயிர் நோவ மழிற்றேன் மின்குயில் பேடைகாள்,

என்னுயிர்க் கண்ண பிரானை நீர்வரக் கூவுகிலீர்,

என்னுயிர்க் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ? (2) 9.5.1

 

3718

இத்தனை வேண்டுவ தன்றந்தோ. அன்றில் பேடைகாள்,

எத்தனை நீரும் நுஞ்சே வலும்கரைந் தேங்குதிர்,

வித்தகன் கோவிந்தன் மெய்ய னல்ல னொருவர்க்கும்,

அத்தனை யாமினி யென்னு யிரவன் கையதே. 9.5.2

 

3719

அவன்கைய தேயென தாருயிர் அன்றில் பேடைகாள்,

எவன்சொல்லி நீர்குடைந் தாடு திர்புடை சூழவே,

தவம்செய் தில்லா வினையாட்டி யெனுயி ரிங்குண்டோ ,

எவன்சொல்லி நிற்றும்நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே. 9.5.3

 

3720

கூக்குரல் கேட்டும் நங்f கண்ணன் மாயன் வெளிப்படான்,

மேற்கிளை கொள்ளேன்மின் நீரும் சேவலும் கோழிகாள்,

வாக்கும் மனமும் கரும மும்நமக் காங்கதே,

ஆக்கையு மாவியும் அந்தரம் நின்று ழலுமே. 9.5.4

 

3721

அந்தரம் நின்றுழல் கின்ற யானுடைப் பூவைகாள்,

நுந்திரத் தேது மிடையில் லைகுழ றேன்மினோ,

இந்திர ஞாலங்கள் காட்டியிவ் வேழுல கும்கொண்ட,

நந்திரு மார்பன் நம்மாவி யுண்ணநன் கெண்ணினான். 9.5.5

 

3722

நன்கெண்ணி நான்வ ளர்த்த சிறுகிளிப் பைதலே,

இன்குரல் நீமிழிற் றேலென் னாருயிர்க் காகுத்தன்,

நின்செய்ய வாயொக்கும் வாயங்கண் ணங்கை காலினன்,

நின்பசுஞ் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான். 9.5.6

 

3723

கூட்டுண்டு நீங்கி கோலத் தாமரைக் கட்செவ்வாய்,

வாட்டமி லெங்கரு மாணிக்கம் கண்ணன் மாயன்போல்,

கோட்டிய வில்லொடு மின்னும் மேகக் குழாங்கள்காள்,

காட்டேன் மின்நும் முருவென் னுயிர்க்கது காலனே. 9.5.7

 

3724

உயிர்க்கது காலனென் றும்மை யானிரந் தேற்கு,நீர்

குயிற்பைதல் காள்.கண்ணன் நாம மேகுழ றிக்கொன்றீர்,

தயிர்ப்ப ழஞ்சோற் றொடுபா லடிசிலும் தந்து,சொல்

பயிற்றிய நல்வள மூட்டினீர் பண்புடை யீரே. 9.5.8

 

3725

பண்புடை வண்டொடு தும்பிகாள். பண்மிழற் றேன்மின்,

புண்புரை வெல்கொடு குத்தாலொக் கும்நும் இன்குரல்,

தண்பெரு நீர்த்தடந் தாமரை மலர்ந்தா லொக்கும்

கண்பெருங் கண்ணன், நம்மாவி யுண்டெழ நண்ணினான். 9.5.9

 

3726

எழநண்ணி நாமும் நம்வான நாடனோ டொன்றினோம்,

பழனநன் னாரைக் குழாங்கள் காள்.பயின் றென்னினி,

இழைநல்ல வாக்கை யும்பைய வேபுயக் கற்றது,

தழைநல்ல இன்பம் தலைப்பெய் தெங்கும் தழைக்கவே. 9.5.10

 

3727

இன்பம் தலைப்பெய் தெங்கும் தழைத்தபல் லூழிக்கு,

தண்புக ழேத்தத் தனக்கருள் செய்த மாயனை,

தெங்குரு கூர்ச்சட கோபன்fசொல் லாயிரத் துள்ளிவை,

ஒன்பதோ டொன்றுக் கும்மூ வுலகு முருகுமே. (2) 9.5.11

Leave a Reply