திருவாய்மொழி பத்தாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

10ஆம் பத்து 3ஆம் திருவாய்மொழி

3805

வேய்மரு தோளிணை மெலியு மாலோ.

மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா காமரு

குயில்களும் கூவு மாலோ. கணமயில்

அவைகலந்தாலு மாலோ

ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு

ஒருபக லாயிர மூழி யாலோ

தாமரைக் கண்கள்கொண் டீர்தி யாலோ.

தகவிலை தகவிலையே நீ கண்ணா. (2) 10.3.1

 

3806

தகவிலை தகவிலை யேநீ கண்ணா.

தடமுலை புணர் தொறும் புணற்ச்சிக் காரா

சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச்

சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே

அகவுயிர் அகமதந்தோறும் உள்புக் காவியின்

பரமல்ல வேட்கை யந்தோ

மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால்

வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே. 10.3.2

 

3807

வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு

வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்

யாவரும் துணையில்லை யானி ருந்துன்

அஞ்சன மேனியை யாட்டம் காணேன்

போவதன் றொருபகல் நீய கன்றால்

பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா

சாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப்

பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே. 10.3.3

 

3808

தொழுத்தையோம் தனிமையும் துணைபி ரிந்தார்

துயரமும் நினைகிலை கோவிந்தா நின்

தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித்

துறந்தெம்மையிட்டு அவை மேய்க்கப் போதி

பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம்

பாவியேன் மனமகந் தோறு முள்புக்

கழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்

பணிமொழி நினை தொறும் ஆவி வேமால். 10.3.4

 

3809

பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்

பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா

பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்

பெருமத மாலையும் வந்தின் றாலோ

மணிமிகு மார்வினில் முல்லைப் போதென்

வனமுலை கமழ்வித்துன் வாயமு தம்தந்து

அணிமிகு தாமரைக் கையை யந்தோ.

அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய். 10.3.5

 

3810

அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய்

ஆழியங் கண்ணா. உன் கோலப் பாதம்

பிடித்தது நடுவுனக் கரிவை மாரும்

பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம்

வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா

மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே

வெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்குவேம்

எமது உயிர் அழல் மெழுகில் உக்கே. 10.3.6

 

3811

வேமெம துயிரழல் மெழுகில் உக்கு

வெள்வளை மேகலை கழன்று வீழ

தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத்

தூணைமுலை பயந்து என தோள்கள் வாட

மாமணி வண்ணா உன்செங்கமல

வண்ணமென் மலரடி நோவ நீபோய்

ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோடு

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 10.3.7

 

3812

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று

ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்

கசிகையும் வேட்கையும் உள்கலந்து

கலவியும் நலியுமென் கைகழியேல்

வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும்

கைகளும் பீதக வுடையும் காட்டி

ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ

உகக்குநல் லவரொடும் உழித ராயே. 10.3.8

 

3813

உகக்குநல் லவரொடும் உழிதந் துன்றன்

திருவுள்ளம் இடர்கெடுந் தோறும் நாங்கள்

வியக்க இன்புறுதும் எம்பெண்மை

யாற்றோம் எம்பெரு மான். பசு

மேய்க்கப் போகேல் மிதப்பல அசுரர்கள் வேண்டும்

உருவங் கொண்டுநின் றுழிதருவர் கஞ்ச னேவ

அகப்படில் அவரொடும் நின்னொ டாங்கே

அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ. 10.3.9

 

3814

அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ.

அசுரர்கள் வங்கையர் கஞ்சனேவத்

தவத்தவர் மறுக நின்றுழி தருவர்

தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்

உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று

ஊடுற வென்னுடை யாவிவேமால்

திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி

செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே. 10.3.10.

 

3815

செங்கனி வாயெங்கள் ஆயர்தேவு

அத்திருவடி திருவடி மேல்பொருநல்

சங்கணி துறைவன் வண்தென் குருகூர்

வண்சடகோபன் சொல்லாயி ரத்துள்

மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை

அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல்

அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான்

உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே. (2) 10.3.11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *