4ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

4ஆம் பத்து 8ஆம் திருமொழி

1318

கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும், காமருசீர்க்

குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும்,

தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும்,

பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.1)

 

1319

கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும்,

வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும்,

செஞ்சொலாளர் நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,

பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.2)

 

1320

அண்டர்கோனென் னானையென்றும் ஆயர்மாதர் கொங்கைபுல்கு

செண்டனென்றும், நான்மறைகள் தேடியோடும் செல்வனென்றும்,

வண்டுலவு பொழில்கொள்நாங்கை மன்னுமாய னென்றென்றோதி,

பண்டுபோலன் றென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.3)

 

1321

கொல்லையானாள் பரிசழிந்தாள் கோல்வளையார் தம்முகப்பே,

மல்லைமுன்னீர் தட்டிலங்கை கட்டழித்த மாயனென்றும்,

செல்வம்மல்கு மறையோர்நாங்கை தேவதேவ னென்றென்றோதி,

பல்வளையா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.4)

 

1322

அரக்கராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,

குரக்கரச னென்றும்கோல வில்லியென்றும், மாமதியை

நெருக்குமாட நீடுநாங்கை நின்மலன்தா னென்றென்றோதி,

பரக்கழிந்தா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.5)

 

1323

ஞாலமுற்று முண்டுமிழிந்த நாதனென்றும், நானிலஞ்fசூழ்

வேலையன்ன கோலமேனி வண்ணனென்றும், மேலெழுந்து

சேலுகளும் வயல்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,

பாலின்நல்ல மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.6)

 

1324

நாடியென்ற னுள்ளொங்கொண்ட நாதனென்றும், நான்மறைகள்

தேடியென்றும் காணமாட்டாச் செல்வனென்றும், சிறைகொள்வண்டு

சேடுலவு பொழில்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,

பாடகம்சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.7)

 

1325

உலகமேத்து மொருவனென்றும் ஒண்சுடரோ டும்பரெய்தா,

நிலவுமாழிப் படையனென்றும் நேசனென்றும், தென்திசைக்குத்

திலதமன்ன மறையோர்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,

பலருமேச வென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.8)

 

1326

கண்ணனென்றும் வானவர்கள் காதலித்து மலர்கள்தூவும்,

எண்ணனென்று மின்பனென்றும் ஏழுலுகுக் காதியென்றும்,

திண்ணமாட நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,

பண்ணினன்ன மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.9)

 

1327

பாருள்நல்ல மறையோர்நாங்கைப் பார்த்தன்பள்ளி செங்கண்மாலை,

வார்கொள்நல்ல முலைமடவாள் பாடலைந்தாய் மொழிந்தமாற்றம்,

கூர்கொள்நல்ல வேல்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்,

ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள் இன்பம்நாளு மெய்துவாரே (4.8.10)

Leave a Reply