6ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

6ஆம் பத்து 3ஆம் திருமொழி

1468

துறப்பேன் அல்லேனின் பம்துற வாது, நின்னுருவம்

மறப்பே னல்லேனென் றும்மற வாது, யானுலகில்

பிறப்பே னாகவெண் ணேன்பிற வாமை பெற்றது, நின்

திறத்தே னாதன் மையால் திருவிண் ணகரானே (6.3.1)

1469

துறந்தே னார்வச் செற்றச்சுற் றம்து றந்தமையால்,

சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே,

அறந்தா னாய்த்திரி வாய் உன் னையென் மனத்தகத்தே,

திறம்பா மல்கொண் டேன்திரு விண்ணகரானே (6.3.2)

1470

மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும்,

ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன்,

கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்

தேனே, வருபுனல்சூழ் திருவிண் ணகரானே (6.3.3)

1471

சாந்தேந்து மென்முலை யார்தடந் தோள்புண ரின்பவெள்ளத்

தாழ்ந்தேன், அருநகரத் தழுந்தும் பயன்படைத்தேன்,

போந்தேன், புண்ணியனே. உனையெய்தியென் தீவினைகள்

தீர்ந்தேன், நின்னடைந்தேன் திருவிண் ணகரானே (6.3.4)

1472

மற்றோர் தெய்வமெண்ணே னுன்னையென் மனத்துவைத்துப்

பெற்றேன், பெற்றதுவும் பிறவாமை யெம்பெருமான்,

வற்றா நீள்கடல்சூ ழிலங்கையி ராவணனைச்

செற்றாய், கொற்றவனே. திருவிண் ணகரானே (6.3.5)

1473

மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும்,

செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை, நெஞ்சில்

உய்யும் வகையுணர்ந்தே _ண்மையாலினி யாது மற்றோர்

தெய்வம் பிறிதறியேன் திருவிண் ணகரானே (6.3.6)

1474

வேறே கூறுவதுண் டடியேன் விரித்துரைக்கு

மாறே, நீபணியா தடைநின் திருமனத்து,

கூறேன் நெஞ்சுதன்னால் குணங்கொண்டு மற் றோர்தெய்வம்

தேறே னுன்னையல்லால் திருவிண் ணகரானே (6.3.7)

1475

முளிதீந்த வேங்கடத்து மூரிப்பெ ருங்களிற்றால்,

விளிதீந்த மாமரம்போல் வீழ்ந்தாரை நினையாதே

அளிந்தோர்ந்த சிந்தைநின்பா, லடியேற்க்கு, வானுலகம்

தெளிந்தேயென் றெய்துவது? திருவிண் ணகரானே (6.3.8)

1476

சொல்லாய் திருமார்வா உனக்காகித் தொண்டுபட்ட

நல்லே னை வினைகள் நலியாமை நம்புநம்பீ,

மல்லாகுடமாடி. மதுசூத னே உலகில்

செல்லா நல்லிசையாய் திருவிண் ணகரானே (6.3.9)

1477

தாரார் மலர்க்கமலத் தடஞ்சூழ்ந்த தண்புறவில்,

சீரார் நெடுமறுகில் திருவிண் ணகரானை

காரார் புயல்தடக்கைக் கலிய னொலிமாலை,

ஆரா ரிவைவல்லார் அவர்க்கல்லல் நில்லாவே (6.3.10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *