தினசரி ஒரு வேத வாக்கியம்: 65. சரணாகதி தத்துவம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

65. சரணாகதி தத்துவம்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்  

“முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே” – சுவேதாஸ்வதர உபநிடதம்.
“மோட்சத்தின் மீது விருப்பம் உள்ள நான் (பரமாத்மாவை) சரணடைகிறேன்!”

சரணாகதி தர்மம் வேதங்களில் பிரபலமானது. பக்தி தத்துவம் வேதத்தில் கூறப்படவில்லை என்றும், பின்னர் வந்த புராண காலத்தில் ஏற்பட்டது என்றும், சரணாகதி என்பது ஞானத்திற்குத் தேவையில்லை என்றும் அரைகுறை ஆய்வாளர்கள் வெகுவாக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் ஞான காண்டமான உபநிஷத்தில் சரணாகதி பற்றி கூறப்பட்டுள்ளது என்பதை மேற்சொன்ன வாக்கியம் மூலம் தெளிவாக அறியலாம்.

விவேகமுள்ள புத்திக்கு ஆர்வத்தை அருளியது பரமாத்மாவே. அதனால் இந்த வாக்கியத்திற்கு முன்னுள்ள மூன்று வாக்கியங்களில்…  

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோஹி வேதா: ப்ரஹிணோஹி தஸ்மை
தமீஸ்வரம் ஆத்மபுத்தி ப்ரகாசம்” –
என்று குறிப்பிட்டார்கள்.

சிருஷ்டிகர்த்தாவை ஏற்படுத்திய பின் அவருக்கு வேதங்களை அருளிய பரமாத்மாவே புத்தியை பிரகாசிக்க செய்யும் ஆத்ம ஞானத்தை அருள்பவர். அதனால்தான் மோட்ச விருப்பமுள்ளவர்கள் அவரை சரணடைகிறார்கள். 

parthasarathi perumal
parthasarathi perumal

தர்மம், யோகம்… எந்த மார்க்கத்தில் பயணித்தாலும் மானுடனின் சக்திக்கு எல்லை உண்டு. அவை சரியாகத் தொடர வேண்டுமென்றால் பல விஷயங்கள் அனுகூலமாக வேண்டும். அந்த அனுகூலமே கடவுள். 

“நாங்கள் ஞானிகள்… பக்தி மார்க்கத்தவரல்லர்!” என்று நினைப்பவர்கள் உண்மையில் ஞானிகளே அல்லர். ஞானம் கூட கடவுள் அனுகிரகத்தால்தான் கிடைக்கிறது. 

ஞானமார்க்கமான பிரஸ்தான த்ரயமும் பக்தியை முதன்மை வழியாக குறிப்பிடுகிறது. அதனால்தான் “ஈஸ்வரானுக்ரஹாதேவ பும்சாமத்வைத வாசனா” –‘ஈஸ்வரனின் அனுகிரகத்தால் தான் அத்வைத வாசனை கிடைக்கும்’ என்று வேத சாஸ்திரங்கள் பல இடங்களில்அறிவித்தன.

krishna arjuna rath
krishna arjuna rath

சரணாகதி தர்மத்தை இராமாயணம் மகாபாரதம் பாகவதம் ஆகியவையும் உலகமயமாக்கி காட்டின. புத்தியை ஈஸ்வரார்ப்பணம் செய்து கடமையை ஆற்றுவதே வெளிப்படையாக கூறப்படும் சரணாகதி தர்மம். செயல்களின் மீது கர்வத்தையும் அதன் மூலம் வரும் விருப்பு வெறுப்புகளையும் நீக்குவதற்கு முக்கிய சாதனமாக உபயோகிப்பது சரணாகதி தர்மத்தையே.

“பந்தான வேங்கடேச! பட்டி நின்னு சரணண்டி 
சந்த கூடால தர்மபு சங்கதி நாகேலா?
” என்று அன்னமய்யா பாடியுள்ளார். 

எந்த மார்க்கத்தில் சென்றாலும் குழப்பமும் வழி தவறுதலும் நேர்கிறது. மனிதனால் தீர்க்க இயலாத குழப்பமான அந்த நேரத்தில் முக்கரணத் தூமையோடு செய்யும் சரணாகதி வழிகாட்டும் தீபமாக உதவுகிறது.

“மாமேகம் சரணம் வ்ரஜ” என்று சரணாகதியை கீதைமிக உயர்ந்த தர்மமாக போதிக்கிறது.தர்மத்திலும் கடமையாற்றுவதிலும் தூய்மையாக ஒருமித்த மனதோடு முன்னேற வேண்டுமென்றால் அதற்குத் தேவையான தன்னம்பிக்கை இறைவனைச் சரணடைவதால்தான் கிடைக்கிறது. 

சத்திய மார்க்கத்தை விட்டு விலகாமல் இருப்பதற்கு உலகம் கொடுக்கும் துணிவை விட கடவுளை நம்பும் ஆத்மார்ப்பணம் அதிகம் உதவும்.

தர்மம் கடவுளுக்கு விருப்பமானது. அவரை சரணடைந்தவர் அவருக்கு விருப்பமானதை விட்டு விலகமாட்டார். பகவத் ப்ரீதிகரமான தர்மத்தை கடைப்பிடிப்பதில் இவ்விதம் உற்சாகமாகத் தொடர்ந்தால் நாளடைவில் ஆத்ம ஸாக்ஷாத்காரம் கிட்டும். 

தர்மத்தை முழுமையாக மேற்கொண்டு எப்படிப்பட்ட மோகத்திற்கும் அடிமையாகாமல் இருப்பவரால் சமுதாயத்திற்கு நிலையான மேன்மை கிடைத்தே தீரும். அப்படிப்பட்ட தனிமனித ஆளுமையை அருளும் ஆற்றல் உண்மையான சரணாகதி தர்மத்திற்கு உண்டு.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 65. சரணாகதி தத்துவம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply