அறப்பளீஸ்வர சதகம்: யாருக்கு எது வெற்றி..?

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

வெற்றி யிடம்

கலைவலா ருக்கதிக சயம் மதுரவாக்கிலே;
காமுகர்க் கதிக சயமோ
கைப்பொருளி லே;வரும் மருத்துவர்க் கோசயம்
கைவிசே டந்தன் னிலே;
நலமுடைய வேசையர்க் கழகிலே! அரசர்க்கு
நாளும்ரண சூரத் திலே
நற்றவர்க் கதிகசயம் உலகுபுகழ் பொறையிலே;
ஞானவே தியர்த மக்கோ
குலமகிமை தன்னிலே; வைசியர்க் கோசயம்
1கூடிய துலாக்கோ லிலே;
குற்றம் இல்லாதவே ளாளருக் கோசயம்
குறையாத கொழுமு னையிலே;
அலைவில்குதி ரைக்குநடை வேகத்தில் அதிகசயம்
ஆம்என்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அருமை தேவனே!, கலையிற் சிறந்தவர்கட்கு இனிய மொழியிலே மிகு வெற்றி (உண்டு), காமத்திலே
ஈடுபட்டவர்கட்குக் கைப்பொருளாலே மிகு வெற்றி (உண்டு). முன்னுக்கு வரும் மருத்துவர்களுக்குக் கைராசியால் வெற்றி (உண்டாகும்), நன்மையுடைய பரத்தையர்க்குத் தங்கள் அழகினாலே (வெற்றியுண்டு), எப்போதும் மன்னவர்கட்குப் போர்க்களத்திலே (அதிக வெற்றியுண்டு), நல்ல தவத்தினர்க்கு உலகம் புகழும் பொறுமையினாலே மிகுவெற்றி (உண்டாகும்), அறிஞரான மறையவர்களுக்கோ தம் மரபுக்குரிய
பெருமையினாலே வெற்றி உண்டாகும், வணிகர்களுக்குப் புகழ்பெற்ற தராசுக்கோலை ஒழுங்காகப் பிடிப்பதனாலே வெற்றி (உண்டாகும்), குற்றம்‌ அற்றவர்களான வேளாளர்க்கு நிறைவுற்ற கொழுவின் நுனியினாலே
(உழுவதால்) வெற்றி உண்டாகும், வருத்தம் இல்லாத குதிரைக்கு அதனுடைய
நடைவிரைவினால் மிகு வெற்றியுண்டாகும் என்று (அறிஞர்) உரைப்பர்.

அவரவர்கள் தம் தொழில் முறையிலேதான் வெற்றியுண்டாகும்

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply