அறப்பளீஸ்வர சதகம்: வறுமை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

வறுமையின் கொடுமை

மேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?
வெகுவித்தை கற்றும் என்ன?
மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன?
மிகுமானி ஆகில் என்ன?
பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசார
பரனாய் இருந்தும் என்ன?
பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?
பாக்கியம் இலாத போது;
வாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்!
வந்தசுற் றமும்இ கழுமே!
மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!
மனைவியும் தூறு சொல்வாள்!
ஆலாலம் உண்டகனி வாயனே! நேயனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

நஞ்சுண்டகனிபோலச் சிவந்த வாயை யுடையவனே! நேயனே அன்புடையவனே!,
குற்றம் இல்லாதவனே!, செல்வம்
இல்லாவிட்டால், உயர்ந்த
குலத்திற் பிறந்தாலும் அதனாற் பயன் இல்லை. மிகுதியான கலைகளைப் படித்துணர்ந்தாலும் பயன் இல்லை,
பேரழகுடன் நற்பண்பு
இருந்தாலும் பயனில்லை, சிறந்த
மானமுடையவனானாலும் பயனில்லை. இனிய மொழிகளை இயம்புவோனானாலும் பயன் இல்லை,
உலகிலே வீரமும் அறிவும் உடையவனெனினும் ஒரு பயனும் இல்லை.
ஈன்ற அன்னையும்
இயல்பாகவே வெறுப்பாள், வருகின்ற
உறவினரும் இகழ்வர்,
எல்லோரும் மதிப்பின்றி உரையாடுவர்,
இல்லாளும் குறைகூறுவாள்.

பொருள் இல்லாமல் உலகிற் சிறப்புப்பெற முடியாது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply