அறப்பளீஸ்வர சதகம்: கடையனுக்கும் கடையன்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

இழிவு

இரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லை
என்னுமவன் அவனின் ஈனன்
ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்
திடும்மூடன் அவனில் ஈனன்!
உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டி
உதவிடான் அவனில் ஈனன்!
உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்
உலுத்தனோ அவனில் ஈனன்!
பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்
பலகால் அலைந்து திரியப்
பண்ணியே இல்லையென் றிடுகொடிய பாவியே
பாரில்எல் லோர்க்கும் ஈனன்!
அரக்கிதழ்க் குமுதவாய் உமைநேச னே!எளியர்
அமுதனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

சிவந்த இதழும் செவ்வல்லிபோன்ற வாயும் உடைய உமையம்மையார் காதலனே!, மெலிந்தவர்க்கு அமுதமானவனே!, அருமை .தேவனே!, உலகத்திற் பிச்சையெடுப்பவன்
இழிந்தவன், அவ்வாறு இரப்பவனுக்கு (வைத்துக்கொண்டு) இல்லையென்பவன்
அவனைவிட இழிந்தவன் : கொடுப்போரைக் கொடாமலே தடுத்துவிடும் அறிவிலி ஈயாதவனிலும் இழிந்தவன்! சொல்லும் சொல்லிலே
நன்மையுண்டு என்று நம்புவித்துப் பிறகு கொடாதவன் அவனினும்
இழிந்தவன், கொடுப்பதாகவே உறுதிமொழி கூறிப்பிறகு
இல்லையென்றே கூறிவிடும் கஞ்சத்தனமுள்ளவனோ எனின் அவனினும் இழிந்தவன், எங்கும்
பரவியிருக்கும் இரவலர்க்கு (நம்பிக்கை யுண்டாகும்படி) ஆசைமொழிகள்
கூறி, பலதடவை உழன்று திரியும்படி
செய்துவிட்ட பிறகே, இல்லையென்று ஏமாற்றிவிடும் கொடிய பாவியே
உலகில் யாவரினும் இழிந்தவன்.

 இரப்பதைவிட இல்லையென்பது இழிவு; அதனினும் ஈவதை

விலக்குதல் இழிவு; அதனினும் பேச்சிலே பயனுண்டென நம்பும்படி சொல்லி
ஏமாற்றுவ்து இழிவு; நாளை வா என்று வந்தபின் இல்லையெனல் அதனினும்
இழிவு; அதனினும் பலமுறை அலைவித்து இல்லையெனல் இழிவு.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply