அறப்பளீஸ்வர சதகம்: பூப்படைந்த இராசி பலன்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

பூப்பு இலக்கிணம்

வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்
மாறாது விபசா ரிஆம்;
வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்
வலிதினிற் பிறரை அணைவாள்;
சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்
சீர்பெறுவள் கன்னி யென்னில்;
செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்
தேளினுக் குத்; தனுசுஎனில்
நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;
நீள்மகரம் மான மிலளாம்;
நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ
நெடியபே ரறிவு டையளாம்;
அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்
அதுவென்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அருமை தேவனே!, மேடஇராசியில் (பூப்படைந்தால்) தவறாமல் வறுமை உண்டாகும், இடபராசியில் தவறாமல் தீய ஒழுக்கமுடையளாவள், மிதுனத்தில் வாழ்வும் இன்பமும் அடைவாள்; கடகத்தில்
தானே (கணவன் அல்லாத) மற்றவரைத் தழுவுவாள், சிங்கத்தில் இழிவுதரும் வறுமையுடையளாவள், கன்னியில் ஆயின் புகழ்பெறுவாள்,துலையாயின் சிக்கனம் உடையளாயிருப்பாள், விருச்சிகத்தில் நோயால் இளைத்திடுவாள், தனுசில் ஆனால் ஒழுக்கம் கெடுவாள், முன்னும் பின்னுந் தீயஒழுக்கம் உடையவளாகவே யிருப்பாள், பெரிய மகரத்தில் பெருமை இழந்தவள் ஆவாள், கும்பத்தில் நிறைந்த இன்பம் உடையவள் ஆவாள், மீனத்தில் ஆனால் மிகுந்த பேரறிவு உடையவள் ஆவாள், இளமங்கையரை அறிவாளர் அறிவதற்குரிய இலக்கின பலன்
இது என்று கூறுவர்.

பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply