அறப்பளீஸ்வர சதகம்: இல்லறம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

இல்லறம்

தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்
சன்மார்க்கம் உளமனை வியைத்
தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்
தனைநம்பி வருவோர் களைச்
சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்
தென்புலத் தோர் வறிஞரைத்
தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
தேனுவைப் பூசுரர் தமைச்

சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாது
தான்புரிந் திடல்இல் லறம்;
சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்
தம்முடன் சரியா யிடார்!
அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்
கன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

பார்வதியும் எவ்வுயிர்க்கும் அன்னையினும் நல்லவளுமான
உமையம்மைக்குக் காதலனே!, அருமை தேவனே!, தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், வழிபாடு தெய்வங்களையும்,
நல்லொழுக்கமுடைய இல்லாளையும், நீங்காத உறவினரையும், குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும்,
தன்னை நம்பிப் புகலடைந்தோர்களையும்,
மனம் மகிழத்தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தாரையும் ஏழைகளையும், குற்றமற்ற
விருந்தினரையும், அன்புமிக்க
உடன்பிறப்பாளர்களையும், பசுக்களையும்,
அந்தணர்களையும், (ஆதரித்தலும்) எப்போதும் செய்யும் கடமைகளையும், (ஆகிய) இவற்றை, எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் ஒருவன் இயற்றுவது
இல்லறம் எனப்படும், பொருந்திய நன்மையையுடையராகிய துறவு
நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply