அறப்பளீஸ்வர சதகம்: சிவன்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

சிவமூர்த்தி

பிறைசூடி, உமைநேசன், விடையூர்தி, நடமிடும்
பெரியன், உயர் வதுவை வடிவன்
பிச் சாடனன்,காம தகனன்,மற லியைவென்ற
பெம்மான், புரந் தகித்தோன்,
மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடி
வௌவினோன், வீரே சுரன்,
மருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்
வனசரன்,கங்கா ளனே,
விறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்தி
மிக்கசக் கரம்உதவி னோன்,
விநாயகற் கருள்செய்தோன் குகன்உமை யுடன்கூடி
மிளிர்ஏக பாதன், சுகன்,
அறிவரிய தட்சிணா மூர்த்தியொ டிலிங்கம்ஆம்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

பிறையணிந்தோன், உமையின்
காதலன் (உமாமகேசன்), விடை ஊர்தி – சேக்கிழான் (இடபவூர்தி),
நடனம் இடும் அண்ணல்,
உயர்ந்த திருமணக் கோலத்தான், பிச்சை யெடுப்போன், மாரனை எரித்தோன்,
காலனை உதைத்த பெரியோன் முப்புரத்தை எரித்தவன், வீரம் நிறைந்த சலந்தரனைக் கொன்றவன், பிரமன் தலையைக் கிள்ளினோன், (வீரபத்திரன்), மருவும் நரசிங்கத்தை மாய்த்த
அரன் (சரபேசுரன்), உமை உமை பங்கன் (அர்த்தநாரீசன்)
வேடன், என்பு அணிந்தோன், வலிமை பொருந்திய சண்டேசருக்கு அருளியவன்,
நஞ்சுண்டவன், திருமாலுக்கு)
உயர்ந்த சக்கரத்தைக் கொடுத்தவன், மூத்த பிள்ளையாருக்கு அருளியவன், முருகன் உமை ஆகிய இருவருடன் கூடியவன் (சோமாஸ்கந்தமூர்த்தி) மிளிர்
விளங்கும் ஒற்றைத் திருவடியான், இன்ப வடிவமானவன், அறிய இயலாத தக்கிணா மூர்த்தியுடன்,
இலிங்கம் ஆகிய தலைவனே!, அருமை
தேவனே!,

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply