பாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. ஒரு மீனவன் வாரத்துக்கு ஒரு முறை அந்தக் குளத்தில் வலை வீசி மீன்களை பிடித்து சென்றான்.

அந்த மீனவன் வரும் போதெல்லாம் எல்லா மீன்களும் பயந்து நடுங்கின. ஆனால் ஒரு மீன் மட்டும் பயப்படாமல் சந்தோஷமாகவே இருந்தது.

மற்ற மீன்களெல்லாம் இந்ந மீனிடம் அது மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடிகின்றது என்று கேட்டன.

அதற்கு அந்த மீன் சொல்லியது என்னவென்றால் மீனவன் வலையை வீசுவற்கு முன் குளத்தில் இறங்கி தன்னுடைய ஒரு காலை குளத்துக்குள் வைத்து நின்று வலையை வீசுவான்.

நான் அவன் காலுக்கு அருகில் சென்று நின்று கொள்வேன். அதனால் அவன் வலையில் எப்பவுமே சிக்க மாட்டேன் என்றது.

அது போல நாமும் பகவானுடைய பாதத்திற்கு அருகில் நின்று கொண்டால் எந்த கஷ்டமும் நம்மை அண்டாது.

எந்த கர்ம வினையும் நம்மை நெருங்காது

Leave a Reply