திருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம்

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார்

திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் உத்தராபதீஸ்வரர் ஆதிவிநாயகர் சூளிகாம்பாள் எட்டுசம்ஹார மூர்த்திகள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற மிக பழமையான கோவிலாகும்

இக்கோவில் அப்பர் சம்பந்தர் அருணகிரியார் ஆகியோர் பாடிய திருக்கோவில் தேவாரத் தலங்கள் 274 கோயில்களில் 142 கோயிலாகவும் காவிரி தென்கரை தலங்களில் இது 79வது தலமாக உள்ளது

இக்கோவிலில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் பிள்ளைக்கறி சமைத்த விழாவும் சிவராத்திரி விழாவும் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும் கோவிலாகும் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்

நீண்டநாளாக மனக்குழப்பம் உள்ளவர்கள் கர்ப்பிணியாக உள்ள பெண்கள் சுகப்பிரசவம் நடைபெற. இத்தல இறைவனை வழிபட நற்பலன் கிட்டுகிறது

thiruchengattangudi1-2.jpeg velakurichi-atheenam-1.jpeg velakurichi-atheenam-thiruchengattangudi-0.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *