உத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம்

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்ஸ்வத்ரா அபிஷேகம் நடந்தது.

திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடந்த தினமான வருடாபிஷேக தினத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேக தினமான தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் ஸ்தாபனபூஜை சம்ஸ்வத்ரா அபிஷேகம் நடந்தது.

உத்திராபதீஸ்வரர் கோயிலை பற்றிய குறிப்பு……

திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் உத்தராபதீஸ்வரர் ஆதிவிநாயகர் சூளிகாம்பாள் எட்டுசம்ஹார மூர்த்திகள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற மிக பழமையான கோவிலாகும்.

இக்கோவில் அப்பர் சம்பந்தர் அருணகிரியார் ஆகியோர் பாடிய திருக்கோவில் தேவாரத் தலங்கள் 274 கோயில்களில் 142 கோயிலாகவும் காவிரி தென்கரை தலங்களில் இது 79வது தலமாக உள்ளது

இக்கோவிலில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் பிள்ளைக்கறி சமைத்த விழாவும் சிவராத்திரி விழாவும் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும்

சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் இக்கோவிலில் வழங்கப்படும் பிள்ளைக்கறி பிரசாதம் மருத்துவ குணமுடையதாகும்

இந்தப் பிரசாதம் பெற்று நிறைய பேர் பலனடைந்திருக்கிறார்கள் குழந்தையில்லா தம்பதிகள் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் கோவிலில் வழங்கப்படும் பிள்ளைக்கறி பிரசாதத்தை அருந்தி பரணி நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய முதல் வருடம் பிரார்த்தனை செய்து அடுத்த வருடம் குழந்தை சொல்வதோடு கோவிலுக்கு வருவது கண்கூடாக காணமுடியும் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களில் பிள்ளைப்பேறு தரும் மழலைச் செல்வம் தரக்கூடிய தலங்களில் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்

கோவிலாகும் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார் நீண்டநாளாக மனக்குழப்பம் உள்ளவர்கள் கர்ப்பிணியாக உள்ள பெண்கள் சுகப்பிரசவம் நடைபெற. இத்தல இறைவனை வழிபட நற்பலன் கிட்டுகிறது

Leave a Reply