கங்கோத்ரி ஆலயம் நவம்பரில் மூடல்

செய்திகள்

உத்தரகாசி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைத்துள்ளது கங்கோத்ரி. நான்கு முக்கியமான புனிதத்தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்திரி வரிசையில் கங்கோத்ரியும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் கங்கோத்ரி வந்துள்ளதாகத் தெரிகிறது. குளிர்காலத்தில் இப்பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டுவிடும். இதைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கங்கோத்ரி மூடப்படுவது வழக்கம். இந்த ஆலயத்தில் உள்ள கங்காதேவி சிலை அருகிலுள்ள முக்பாவி கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பூஜைகள் நடத்தப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மீண்டும் கங்கோத்ரி ஆலயம் திறக்கப்படும் என்று செம்வால் கூறினார்.

Leave a Reply