நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

செய்திகள்

இரவு சோமவார மண்டபத்தில் சுவாமி, அம்பாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  பின்னர் சோடச அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். மேலும் சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கும், சங்கிலி மண்டபத்தில் அமைந்துள்ள மஞ்சனவடிவம்பாளுக்கும்  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல, இம் மாதம் 22 ஆம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் தினமும் அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெறும்.  17 ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜயதசமி பரிவேட்டைக்கு, வெள்ளிக்குதிரை வாகனத்தில் ஸ்ரீ சந்திரசேகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் ராமையன்பட்டியில் அம்பு இடும் நிகழ்ச்சி நடைபெறும்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி க. சண்முக தெய்வநாயகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர். இதேபோல மாநகரில் உள்ள பல கோயில்களில் நவராத்திரி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Leave a Reply