இன்பதுன்பம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
bharathi theerthar
bharathi theerthar

சில சந்தர்ப்பங்களில் சில விசேஷ குணங்கள் மனிதனுக்கு இன்றியமையாதவை ஆகின்றன. உதாரணமாக கஷ்டதசையில் தைரியம், செல்வத்துக்கு நடுவில் எளிமை, யுத்த களத்தில் வீரம், வித்தையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம், பொது மக்களுக்கு முன் பிரசங்கம் செய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பொதுவாக மனித வாழ்க்கையில் நல்ல காலமும், கெட்ட காலமும் மாறி மாறி வருகின்றன. மனிதன் கஷ்டங்களை எதிர்கொள்ளும்பொழுது அவன் தன் நல்ல காலம் முடிந்து விட்டதாக ஒருபொழுதும் நினைக்கக்கூடாது.

இரவுக்குப் பின் பகல் வருவது மாதிரி கெட்ட காலத்துக்குப்பின் நல்ல காலம் நிச்சயமாக வரும். இந்த தீவிர நம்பிக்கை இருந்தால்தான் மனிதன் வாழ்க்கையில் எந்தவிதமான கஷ்ட நிலைமையையும் எதிர்கொள்ள முடியும்.

ராமாயணத்தில் ஸ்ரீராமரும் மஹாபாரதத்தில் தர்மபுத்ரரும் வனவாசம் புரிய வேண்டி இருந்தது. ஆனால் அவர்கள் தைரியத்தை இழக்காமல் வனவாசம் செய்து கடைசியில் சுகத்தை பெற்றார்கள்.

அதே மாதிரி ஒரு மனிதன் நிறைய பணத்தை சம்பாதித்தாலும் அவன் பகவத் கிருபையால் தான் பணம் கிடைத்தது என்று எண்ண வேண்டும்.

மேலும் எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அவன் கர்வமடைந்து தப்பான காரியங்களை செய்ய தொடங்கினால் கடைசியில் அவன் கஷ்டப்பட வேண்டி வரும்.

ராவணனும் துரியோதனனும் ஐஸ்வர்யத்தை பெற்றார்கள். ஆனால் அகங்காரத்தினால் பாவ காரியங்களைச் செய்தார்கள். இது அவர்களை கடைசியில் அழியவைத்தது நமக்கு தெரியும்.

யுத்த களத்தில் இறங்கும் வீரனுக்கு அவனுடைய வீரம் தலைதூக்கி நிற்கும் குணமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு சண்டையினால் ஏற்படப்போகும் கஷ்டத்தை எண்ணி அவன் சண்டை போட தயங்கக்கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் அவன் நிமிர்ந்து நின்று அச்சமின்றி தைரியமாக யுத்தம் புரிய வேண்டும்

மேலும் மனிதன் சந்துஷ்டி அடையக் கூடாத ஒரு துறை இருக்கிறது. அதுதான் புலமை பெறுதல் என்பது. கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மனிதனுக்கு மேலும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் வேண்டும்.

சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் சத்சங்களுக்குச் சென்று அறிவைப் பெருக்கிக் கொள்வது நிச்சயம் நன்மை பயக்கும்.

அதே மாதிரி பொதுக்கூட்டங்களில் பேசும் பொழுது கேட்பவர்களின் மனதை மகிழ்விக்கும் படி பேச முடிய வேண்டும்.

தொடர்ந்து பயிற்சி செய்தால் இவை மனிதனின் வாழ்க்கையை நிஜமாக மாற்றிவிடும் குணங்களில் சிலவாகும்

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply