இருகண்கள்

செய்திகள்

தனுர் ராசியில் சூரியன் பிரவேசிப்பதை “தனுர்மாதம்’ என்று அழைக்கின்றோம். தமிழில் இதுவே மார்கழி மாதம் ஆகும். இந்தமாதம், தேவர்களுக்கு சூர்யோதயக்காலம். பொதுவாக “பிரம்ம முகூர்த்தம்’ என்று சொல்லப்படும் சூரிய உதய காலத்தில் செய்கிற எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் அதிகப் படியான பலன் கிடைக்கும் என்

பது மூத்தோர் சொல். எனவே திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள், இந்த மார்கழி மாதம் நோன்பிருந்து ஆண்டவனை வழிபடுவார்கள யானால், விரைவில் நல்ல கணவனை அடைவார்கள் என்பது திண்ணம். கண்ணபரமாத்மாவைகணவனாகஅடைய

வேண்டும்என்பதற்காககாத்தியாயனியை(துர்கையின்ஒரு

அம்சம்)பிருந்தாவனகோபிகைகள்,நோன்பிருந்துபூஜித்

துள்ளனர்.இதுபற்றியகுறிப்பு,ஸ்ரீமத்பாகவதபுராணத்

தில்உள்ளது.

“விரதமிருந்து நல்ல கணவனை அடைவது’ என்பது

பாவை நோன்பின் புறப்பொருள். ஆண், பெண் என்னும்

இருவகை ஜீவாத்மாக்களுமே பக்தி செய்து பரமனுடன்

கலக்க அறிவுறுத்துவதே இந்த நோன்பின் அகப்பொருள்.

இக்கருத்தை உள்ளீடாகக் கொண்டு உருவானவையே

மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், ஆண்டாள்

அருளியதிருப்பாவையும்!

திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலுமே பெண்

களை நித்திரையிலிருந்து எழுப்புகின்ற வகையில் பாடல்

கள்அமைந்துள்ளன. “மாயை’ என்னும் தூக்கத்தில்

தன்னை மறந்து கிடக்கும் ஜீவாத்மாக்கள், விழிப்புணர்வு

பெற்ற ு- பரமாத்மாவை அடையவேண்டும் என்பதே

ஆண்டாளுக்கும், மாணிக்கவாசகருக்கும் நோக்கம்.

இந்துமதத்தின் இரு கண்களாக சைவமும், வைண

வமும்விளங்கிவருகின்றன.எனவே மார்கழி மாதத்தில்

அனைவரும், தங்கள் மரபுக்கேற்ப திருவாசகத்தையோ,

திருப்பாவையையோ, அல்லது இரண்டையுமோ பாராய

ணம் செய்து பரமனின் அருள் பெறுக!

குசேல திகுசேல தினம்

 

இதே மார்கழி மாதத்தில்,கேரளத்தில் உள்ள

ஸ்ரீகுருவாயூரப்பன் ஆலயத்தில், “குசேல தினம்’

கொண்டாடப்படுகிறது. கண்ண பரமாத்மா, “சாந்தீ

பினி’என்ற குருவிடம் பாடங்கள் பயின்ற போது,

“சுதாமா ‘என்ற அந்தண சிறுவனும் அதே குரு

குலத்தில் படித்து வந்தான். கண்ணனும், சுதாமாவும்

பள்ளித் தோழர்கள்.

பிற்காலத்தில் சுதாமா என்னும் குசேலர், திருமணம் செய்துகொண்டு- ஏழ்மையில் மூழ்கியிருந்தார். கண்

ணனோ துவாரகையின் மன்னனாகி விட்டார்.

இந்நிலையில் ஒரு நாள் குசேலரின் மனைவி, தன் குடும்பம், வறுமையால் படும் அல்லல்களைப் பொறுக்கமாட்டாமல் கலங்கினாள். தனது கணவரிடம் அவரது பால்ய சிநேகிதனும், துவாரகாபுரி அரசனுமாகிய கிருஷ்ணனை சென்று சந்தித்து உதவி கோருமாறு கேட்டுக் கொண்டாள். இதற்கு அரைமனத்துடன் ஒப்புக்கொண்ட குசேலர், கண்ணபிரானுக்கு அர்ப்பணிக்க ஏதாவது தருமாறு மனைவியிடம் கேட்டார். அந்த உத்தமி, இரண்டு மூன்று வீடுகளில் யாசகம் செய்து மூன்றுபிடி “அவலை’கொடுத்தாள்.தனதுகிழிந்த மேல் வேஷ்டியில் அவலை ஒரு சிறு முடிச்சாகக் கட்டி வைத்துக் கொண்டு, துவாரகாபுரிக்கு சென்றார் குசேலர்.

திடீரென வந்த குசேலரை கண்ட கண்ணன், தனது

பழைய தோழமையை மறவாமல்,அரண்மனை வாயிலிலி

ருந்து குசேலரை பேரன்போடுவரவேற்று உள்ளே அழைத்

துச் சென்று ஆசனத்தில் அமரவைத்தான்.கூச்சத்துடன்

குசேலர்அமர்ந்திருந்தார். அப்போதுஅவரேஎதிர்பாராத

வகையில், அவருடைய பாதங்களை தாம்பாளத்தில் வைத்துக்கழுவி, அந்த நீரைதானும் தெளித்துக் கொண்டு, அருகிலிருந்த ருக்மிணிக்கும் தெளித்தான் கண்ணன். இந்த அளவற்ற பெருங் கருணையால் மனம் நெகிழ்ந்த குசேலர், கண்ணனுக் காகதான் கொண்டு வந்த அவலைப் பற்றி மறந்து விட்டார்; தான்வந்தநோக்கத்தையும் கூறவில்லை. மிகவும் தயக்கத்துடன் இருந்த அவர் மடியிலிருந்து கிருஷ்ணனே ஒருபிடி அவலை எடுத்து வாயில் போட்டுச் சுவைக்க ஆரம்பித்தான். அதன் பின்னர் குசேலர், குபேரன் போலாகியதை அனைவரும் அறிவோம்.

நாளது 22-ம்தேதி, கேரளாவில் உள்ள குருவாயூரப்

பன் ஆலயத்தில்””குசேல தினம்” கொண்டாடப் படவுள்ளது. அன்று முழுவதும் குருவாயூரப்பனுக்கு அவல் சம்பந்தப் பட்ட பொருள்களின் நிவேதனமே நடக்கும் .நாமும் அன்றையதினம் திருமால் ஆலயத்தில் அவல் நிவேதனம் செய்து அகம் மகிழ்வோமாகுக!

-ஐஸ்வர்யா ஸ்ரீமாணிக்கவாசகர், ஆவுடையார்கோயில் ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீவில்லிபுத்தூர் குசேலர்-ஸ்ரீகிருஷ்ணர்

Leave a Reply