முருகன்: அறிந்ததும் அறியாததும்..!

செய்திகள்

e0aeaee0af81e0aeb0e0af81e0ae95e0aea9e0af8d e0ae85e0aeb1e0aebfe0aea8e0af8de0aea4e0aea4e0af81e0aeaee0af8d e0ae85e0aeb1e0aebfe0aeaf

e0aeaee0af81e0aeb0e0af81e0ae95e0aea9e0af8d e0ae85e0aeb1e0aebfe0aea8e0af8de0aea4e0aea4e0af81e0aeaee0af8d e0ae85e0aeb1e0aebfe0aeaf

முருகப்பெருமான் பற்றிய அற்புத தகவல்கள்.

கந்தனுக்குரிய விரதங்கள்:

  1. வார விரதம்,
  2. நட்சத்திர விரதம்,
  3. திதி விரதம்.
    முருகனின் மூலமந்திரம்..
    ஓம் சரவணபவாய நம
    என்பதாகும்.

மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

முருகனின் கோழிக்கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தள் முதலியவை ஆகும்.

முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

முருகனைப்போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தாசலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.

கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

முருகன் வீற்றிருக்கும் மிகநீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

முருகன்: அறிந்ததும் அறியாததும்..! News First Appeared in Dhinasari

Leave a Reply