ஆஞ்சநேய உபாசனை: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்

பகவான் ஸ்ரீ ராமச்சந்திரருடைய பக்தர்களில் மிக உயர்ந்தவர் ஹனுமான். அவர் ஈஸ்வர அம்சத்தினால் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே மிகுந்த சக்தி கொண்டவர்.

ஸ்ரீ ராமருக்கும் ஸுக்ரீவனுக்கும் ஸ்னேகத்தை ஏற்படுத்தியவர். சீதையைக் கண்டு பிடித்து ஸ்ரீராமருக்கு தகவல் சொன்னவர் . அவருடைய குணங்களை பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரே புகழ்ந்திருக்கிறார்.

அதாவது, பராக்ரமமும் சாமர்த்தியமும் பிரக்ஞையும் ஹனுமாருக்கு விசேஷமாக உண்டு என்று கூறியிருக்கிறார்.

ராவணனின் தர்பாருக்கு சென்று கொஞ்சமும் தயங்காமல் ஹனுமார் அவனுக்கு நன்னடத்தையை பற்றி புத்திமதி சொன்னார். விபீஷணன் ராமரிடம் வந்து சரணாகதி அடைந்த பொழுது மற்றவர்கள் எல்லோரும் அவனுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று சொன்னாலும் விபீஷணனுக்கு இடம் கொடுக்கலாம் என்று உத்தமமான வார்த்தை சொன்னவர் ஹனுமான் தான்.

ஸ்ரீமத் ராமாயணத்தில் ஹனுமாருடைய பாத்திரம் மிக முக்கியமானது. வால்மீகி மஹரிஷி ஹனுமாரைப் பற்றி மிகவும் உயர்வாக கூறியிருக்கிறார்.

துளஸிராமாயணத்திலும் ஹனுமாரின் மஹிமை சிலாக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. துளஸிதாசர் எழுதின ஹனுமாந்சாலீஸா நம் நாட்டில் எல்லா இடங்களிலும் பிரச்சாரத்தில் உள்ளது.

ஸ்ரீ ஹனுமாரை உபாஸிப்பதன் மூலம் புத்தியும் பலமும் கீர்த்தியும் தைரியமும் எல்லா பக்தர்களுக்கும் சந்தேகமின்றி கிடைக்கும். ஸ்ரீ ஆதிசங்கரர் மற்றும் பல மஹரிஷிகள் ஹனுமாரை ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள்.

அப்பேர்பட்ட ஹனுமாரை எல்லோரும் உபாஸித்து சிரேயஸ்ஸை அடைவார்களாக.

ஸ்ரீ ஹனுமாரை ஸ்மரிப்பதால் புத்தி, பலம், கீர்த்தி, தைர்யம், பயமின்மை, ஆரோக்யம் வாக்சாதுர்யம் ஆகிய எல்லாம் கிடைக்கும்

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

ஆஞ்சநேய உபாசனை: ஆச்சார்யாள் அருளுரை! News First Appeared in Dhinasari

Leave a Reply