2 தவணை ஊசி போட்டிருந்தாதான்… திருவண்ணாமலை கோயிலில் அனுமதியாம்!

செய்திகள்

2 e0aea4e0aeb5e0aea3e0af88 e0ae8ae0ae9ae0aebf e0aeaae0af8be0ae9fe0af8de0ae9fe0aebfe0aeb0e0af81e0aea8e0af8de0aea4e0aebee0aea4e0aebe

thiruvannamalai

அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ அதிகரித்து வரும் கொரோனா மற்றும்‌ ஒமைக்கரான்‌ தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்‌ கொண்டு, 10.01.2022 (திங்கள்‌ கிழமை) முதல்‌ கொரோனா தடுப்பூசி 2 தவணைகள்‌ செலுத்தியவர்கள்‌ மட்டுமே திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர்‌ திருக்கோயிலில்‌ சுவாமி தரிசினம்‌ செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்‌ எனத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

சுவாமி தரிசனம்‌ செய்ய வருகை தருபவர்கள்‌ கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள்‌ செலுத்தியற்கான ஆதாரமாக சான்று அல்லது கைபேசியில்‌ பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால்‌ மட்டுமே திருக்கோவில்‌ வளாகத்திற்குள்‌ அனுமதிக்கப்படுவார்கள்‌.

தற்போது, கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும்‌ நிலையில்‌, பக்தர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ உள்ளிட்ட அனைத்து தரப்பினரும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ நோய்‌ தொற்று பரவலை தடுக்கும்‌ இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ கொரோனா தொற்று அதிகளவில்‌ பரவாமல்‌ இருக்க உதவிடுமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை

2 தவணை ஊசி போட்டிருந்தாதான்… திருவண்ணாமலை கோயிலில் அனுமதியாம்! News First Appeared in Dhinasari

Leave a Reply