அது சரி… பொங்கல் என்னிக்கு?! 14ஆம் தேதியா? 15ம் தேதியா?

செய்திகள்
e0ae85e0aea4e0af81 e0ae9ae0aeb0e0aebf e0aeaae0af8ae0ae99e0af8de0ae95e0aeb2e0af8d e0ae8ee0aea9e0af8de0aea9e0aebfe0ae95e0af8d

பொங்கல் என்று கொண்டாடப்பட வேண்டும் என்பதில் இந்த முறை குழப்பங்கள் உலவுகின்றன. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்படும் தகவல்களில் ஜனவரி 15ஆம் தேதி தான் பொங்கல் பானை வைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஜோதிட ரீதியாகவும் பஞ்சாங்கத்தை அனுசரிக்கும் கூறும் பெரியவர்கள் ஜனவரி 14ஆம் தேதி கை 1-ஆம் தேதி பிறக்கும் அதே நாளில் பொங்கல் பண்டிகையும் மகரசங்கராந்தியும் கொண்டாடப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்

இதில், இரண்டு விதமான கருத்துகள் உள்ளன அவரவர் ஆசாரியர்கள் சொல்வதை செய்யலாம் என்று குறிப்பிட்டு, வாக்கியப் பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்களும் திருக்கணிதப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றுபவர்களும் என இருவேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மகர சங்கராந்தி உத்தராயண புண்ய காலம் (வாக்கிய பஞ்சங்க அனுஷ்டானம் செய்பவர்களுக்கு)… (2022) ப்லவ வருஷ உத்தராயண புண்யகாலம் மற்றும் தை பொங்கல் பற்றி பல வித விவாதங்கள், கருத்துக்கள் , ஆலோசனைகள் , விசாரங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டும் புண்ய கால அனுஷ்டானம் செய்யும் காலத்தின் சரீர மற்றும் (ப்ராக்டிக்கல்) உடல் ரீதியான (பிற்பகல் பொழுது வரை உபவாசம் இருப்பது) நடைமுறை சாத்தியம் என அனைத்து கருத்தின் அடிபடையில் வரும் ப்லவ வருஷம் உத்தராயண மகர ரவி சங்கரமண புண்ய காலத்தை 15.01.2022 சனிகிழமை அனுஷ்டிக்கலாம்.

உத்திராயாண புண்ய கால தர்பணம் 15.01.2022 சனிகிழமை காலை 6.40 – முதல் 7.30 க்குள்
தை பொங்கல் பானை 15.01.2022 காலை 07.30 – 08.30
சூர்ய நாராயண பூஜை 08.00 – 09.00 அல்லது 10.30 – 11.30 என்று செய்யலாம் என குறிப்பிடும் ஒரு தகவல், பின்குறிப்பாக, அவரவர் வீட்டு ஜோதிடர், ஆசாரியர், குருவின் ஆலோசனை படி செய்யவும் என்றும் டிஸ்க்ளெய்மர் வேறு போட்டு பரவி வருகிறது.

மேலும், மகர ரவி சங்கரமன காலம் சூர்ய அஸ்தமன காலம் 14.01.2022 வெள்ளி அன்று ஊருக்கு ஊர் மாறுபடுவதால்தான் இந்தக் குழப்பம் என்றும் அதில் காரணம் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கப்படியும், பெரியோர்களை மேற்கோள் காட்டியும், திருநெல்வேலி ஜங்ஷன் ஸ்ரீ ஸ்ரீசிருங்கேரி மடத்தைச் சேர்ந்த சேகர் வாத்யார் குறிப்பிடும் போது, உத்தராயண புண்யகாலம் குறித்து எந்தவிதமான குழப்பமும் வேண்டாம். இதே போல மற்ற நித்ய நைமித்யக கர்மாவையும் அவரவர் பஞ்சாங்கப்படி அவரவருடைய குடும்ப வாத்யாராக (ப்ருஹஸ்பதி) இருப்பவர்களைக் கேட்டு அனுஷ்டிக்க வேண்டும். இதைத்தான் சிருங்கேரி ஆசார்யாளுடைய அறிவுரையாக சொல்லியிருக்கிறார்கள்.

எனவே திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கப்படி ஜனவரி 14 வெள்ளிக்கிழமை அன்றே உத்தராயண புண்யகாலம் தைப்பொங்கல் மகர ஸங்கராந்தி ஆகியவற்றை அன்றைய தினமே அனுஷ்டானம் செய்யவேண்டும்… என்றார். இதே போல், பெரும்பாலான உபாத்யாயர்களும் பெரியோர்களும் கூறியுள்ளனர்.

பொதுவாக, மாலை சூரிய அஸ்தமனத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் பஞ்சாங்கப்படி மாதம் பிறக்கிறது. எனினும், அதன் 20 நாழிகைக்கு முன்னர், அதாவது 8 மணி நேரத்துக்கு முன்னர் மாதப் பிறப்புக்கான சடங்குகள், கர்மாக்களை நடத்தலாம் என்று சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதால், ஜன.14 அன்று காலை 10 மணிக்குப் பின் பொங்கல் பானை வைக்கலாம்! அன்று வெள்ளிக்கிழமை என்பதால், 10.30-12.00 ராகுகாலம். அந்த நேரம் கழிந்தும் வைக்கலாம் என்று கூறுகின்றனர் பெரியோர் சிலர்.

Leave a Reply