இரண்டு நிமிடம் மட்டுமே மூடும் கோவில்!

செய்திகள்
e0ae87e0aeb0e0aea3e0af8de0ae9fe0af81 e0aea8e0aebfe0aeaee0aebfe0ae9fe0aeaee0af8d e0aeaee0ae9fe0af8de0ae9fe0af81e0aeaee0af87 e0aeae

இரண்டு நிமிடம் மட்டுமே மூடும் கோவில் திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில் கோட்டயம்! கேரளா
1500 வருட கோவில் இரவு 11:58 க்கு மூடி 12 மணிக்கு திறக்கும் கோவில் நடை திறக்கும் போது பூட்டு ஏதாவது இடைஞ்சல் செய்தால் கோடாரி கொண்டு பூட்டை உடைக்க தந்திரியிடம் ஒரு கோடாரியும் கையில் உண்டு

கிரகண நேரத்திலும் கோவில் மூடுவதில்லை காரணம் கம்சனை கொன்று ரொம்ப உஷ்ணமாக இருந்ததாலும் பசியோடு இருந்த காரணத்தால் காலை அபிஷேகம் செய்து தலையில் ஈரம் உலர்த்தி உடனே நைவேத்தியம்

பிறகு தான் உடலில் ஈரம் உலர்த்தி அலங்காரம் அதிகாலை மூன்று மணிக்கு ஒரு பாயசம் நைவேத்தியம் ரொம்ப பிரமாதமாக இருக்கும் இங்கு அடாது மழை பொழிந்தாலும் விடாது நைவேத்தியம் செய்து கொண்டே இருப்பார்கள்.

குஜராத் துவாரகேஷ்வர் கோவிலில் 17 முறை நைவேத்தியம் இங்கு தொடர்ந்து உண்ணும் கிருஷ்ணன் பசி தாங்க முடியாத குழந்தையாக இருக்கின்றார்.

ஆதிசங்கரர் காலத்தில் ஒரு முறை கிரகண நேரத்தில் நடை மூடி திறந்த போது கிருஷ்ணரின் இடுப்பு பட்டி நெகிழ்வாக இறங்கியதால் அப்போது ஆதிசங்கரர் பசியோடு இருப்பதால் உடல் இளைத்து இடுப்பு பட்டி இப்படி ஆனது என்று சொல்லியதால் அன்று முதல் இன்று வரை கோவில் மூடுவதில்லை

இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கட்டாயம் பிரசாதம் வழங்கி விடுவார்கள் நடை மூடும் முன் யாராவது பசியோடு இருந்தால் வாங்க என்று அழைத்து அன்னமிட்டு நடை மூடி உடனே கோடாரியோடு நின்று நடை திறந்து அமுது படைத்து அன்னமிடுவார்கள்.

இங்கு ஒரு முறை பிரசாதம் பெற்றால் அவர்களுக்கு வாழ் நாளில் உணவு கஷ்டம் வராது

Leave a Reply