குருவின் லட்சணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
e0ae95e0af81e0aeb0e0af81e0aeb5e0aebfe0aea9e0af8d e0aeb2e0ae9fe0af8de0ae9ae0aea3e0ae99e0af8de0ae95e0aeb3e0af8d e0ae86e0ae9ae0af8d

சீடனானவன் குருவைச் சரணமடைந்து சேவை செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். குருவினிடம் இருக்க வேண்டிய இலட்சணங்கள் எவை என்பது குறித்து வேதாந்ததேசிகர் சுலோகம் ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியம்
அனகம் ச்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம்
ஸத்வஸ்தம் ஸத்யவாசம் ஸமயநியதயா
ஸாதுவ்ருத்யா ஸமேதம் I
தம்பாஸூயாதிமுக்தம் ஜிதவிஷயகணம்
தீர்கபந்தும் தயாலும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வபரஹிதபரம்
தேசிகம் பூஷ்ணுரீப்ஸேத் II

(நல்ல சம்ப்ரதாயத்தில் சித்தமுடையவரும், திடமான மனதுடையவரும், பாவமற்றவரும், சாஸ்திரங்களை அறிந்தவரும், ப்ரஹ்மத்தில் ஒன்றியவரும், ஸத்வ குணம் அதிகமாகப் பெற்றுள்ளவரும், உண்மை பேசுபவரும், நல்ல ஆசாரத்துடனிருப்பவரும், டம்பம், பொறாமை போன்றவைகளில்லாதவரும், வெளிப்பொருட்கள் விஷயமான பற்றை வென்றவரும், எப்போதும் உறவினராக விளங்குபவரும், தயையுடையவரும், தவறுகளைத் திருத்துபவரும், தனக்குச் சேர்ந்தவர்களுக்கும், பிறருக்கும் நன்மையை விரும்புபவருமான குருநாதரை வணங்குகிறேன்.)

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Leave a Reply