தைப்பூசம் ஸ்பெஷல்: விரதமும் மகிமையும்..!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
e0aea4e0af88e0aeaae0af8de0aeaae0af82e0ae9ae0aeaee0af8d e0aeb8e0af8de0aeaae0af86e0aeb7e0aeb2e0af8d e0aeb5e0aebfe0aeb0e0aea4e0aeae

– Advertisement –

– Advertisement –

தைப்பூசம் ஸ்பெஷல்:

இந்த தைப்பூசத் திருநாளன்று முருக பெருமானை உலகெங்கிலும் வழிபடுவர் . முருகனுக்கென்று ஏராளமான பெருமைகளும் பராக்கிரமங்களும் இருக்கின்றன.

தைப்பூசத்தன்று தொட்ட காரியமெல்லாம் துலங்கும்.

ஊர்களில் திருவிழாக்களில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்வதைப் பார்த்திருப்போம். அதேபோல் மற்ற எந்த கடவுளுக்கும் இல்லாமல் முருகனுக்கு இந்த தைப்பூச நாளில் குறிப்பாக, பக்தர்களால் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்படும்.

அதில் மிக முக்கியமானதாகச் சொல்ல வேண்டுமென்றால், வேலெடுத்தல், நாக்கில் வேல் குத்துதல் (அலகு குத்துதல்), பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என விதவிதமான காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

நம்முடைய இன்னல்களைத் தீர்க்கும் தைப்பூச விரத தினத்தன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று விரிவாகப் பார்க்கலாம். தைப்பூச விரத தினத்தன்று மனதில் என்ன நினைத்து வேண்டுகிறோமோ அது அப்படியே நிறைவேறும். அதேபோல் இந்த நாளில் முருகனின் பார்வை பட்டுவிட்டால் உங்களுடைய வாழ்க்கையில் ராஜயோகம் உண்டாகும்.

பொதுவாக தீவிர முருக பக்தர்கள் எல்லோருமே மார்கழி மாதத் தொடக்கத்திலேயே தங்களுடைய தைப்பூச விரதத்தைத் தொடங்கி விடுவார்கள். கழுத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். நாள் முழுக்க திருப்புகழோ, கந்த சஷ்டியோ, சரவண சஷ்டியோ பாடிக் கொண்டிருப்பது நல்லது.

மாதக் கணக்கில் விரதம் இருக்க முடியாமல் தைப்பூச நன்னாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் தான் மிக அதிகம். அப்படி அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் அந்த நாள் முழுக்க வெறும் தண்ணீர் தவிர வேறு எந்தவித உணவையும் சாப்பிட கூடாது. அந்த நாளின் இறுதியில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும்.

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் தைப்பூச விரதத்துக்கு உண்டு என்று சொல்வார்கள். அப்படி நீண்ட நாட்களாக குணமாகாமல் ஏதேனும் நோயால் அவதிப்படுபவராக இருக்கிறவர்கள் முருகளை வேண்டிக் கொண்டு ஏதேனும் ஒரு காவடி எடுத்தால் தீராத நோயும் தீர்ந்து போகும்.

– Advertisement –

Leave a Reply