ஸ்ரீ மஹா பெரியவருக்கு ரூ.10 கோடிக்கு மேற்பட்ட செலவில் பக்தர்களால் ஓரிக்கையில் கருங்கல்லால் ஆன மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் முடிவுற்றுள்ளன. இதன் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 9-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகின்றன. தினமும் ஹோமங்கள், அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.
ஜனவரி 28-ம் தேதி விமான மஹா கும்பாபிஷேகமும், மூல மூர்த்தி, மஹாபாதுகா அபிஷேகமும், அலங்காரம் மஹா தீபாராதனையும், இதைத் தொடர்ந்து மஹாபிஷேகமும் நடைபெற உள்ளன.
இதில் மூலஸ்தானத்தில் மஹா பெரியவருக்கு கருங்கல்லால் ஆன சிலையும், ருத்ராட்சத்தால் ஆன மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகைகள் மரத்தால் செய்யப்பட்டு தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
மணி மண்டபம் விவரம்: இந்த மணி மண்டபம் 100 அடி உயர விமானத்துடனும், 100 கால் மண்டபம், பாதுகா மண்டபம், ருத்ராட்ச மண்டபம், கர்ப்பகிரஹம் ஆகியவற்றுடன் 150 அடி நீளம், 52 அடி அகலத்தில் அமைந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கருங்கல்லால் ஆன கோயில்கள் போல் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை பெரியக் கோயிலை நினைவுபடுத்துவதுபோல் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த மணி மண்டபப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளன. ராஜகோபும், ஸ்தம்பம், பெரிய நந்தி ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மணி மண்டபத்தின் இதர பணிகள் முடிந்து விட்டதால் குடமுழுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மணி மண்டபத்தை நிர்மாணித்து வரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாலக்ஷ்மி மாத்ருபூதேச்வரர் அறக்கட்டளையைச் சேர்ந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
செய்தி: https://www.dinamani.com/edition/story.aspx?artid=354434