
ஒருவன் தனக்கு சுகம் வந்தாலும் துக்கம் வந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் துக்கம் வந்தால் அழுவோம். ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் சுகம் வந்தாலும் அழுது கொண்டிருக்க வேண்டுமா.? இவ்வாறு விபரீதமாக அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது..
சுகத்திலும் துக்கத்திலும் நம் மனது சஞ்சலப்படக் கூடாது என்பதுதான் பகவான் கூறிய உபதேசத்தின் தாத்பர்யம்.. சிலபேர் சுகம் அதிகமாக வந்துவிட்டால் தலைகால் தெரியாமல் குதிப்பார்கள்.
சிறிய துக்கம் வந்தாலும் வானமே தலையில் விழுந்தாற்போல் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.. இந்த இரண்டு பாவனைகளுமே தவறானவை தான்.
நம்முடைய சுகமும் துக்கமும், இறைவனின் ஸங்கல்பத்தினால்தான் என்ற எண்ணத்துடனிருந்து, அதிக மகிழ்ச்சி, அதிக துக்கம் போன்றவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்