அறப்பளீஸ்வர சதகம்: நல்ல ஆசிரியர் மாண்பு!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

நல்லாசிரியர் இயல்பு

வேதாந்த சித்தாந்த வழிதெரிந் தாசார
விவரவிஞ் ஞானபூர்ண
வித்யாவி சேடசற் குண சத்ய சம்பன்ன
வீரவை ராக்ய முக்ய
சாதார ணப்பிரிய யோகமார்க் காதிக்ய
சமாதிநிஷ் டானு பவராய்ச்,
சட்சமய நிலைமையும் பரமந்த்ர பரதந்த்ர
தருமமும் பரச மயமும்
நீதியின் உணர்ந்து, தத்துவமார்க்க ராய்ப், பிரம
நிலைகண்டு பாச மிலராய்,
நித்தியா னந்தசை தன்யராய், ஆசையறு
நெறியுளோர் சற்கு ரவராம்
ஆதார மாய்உயிர்க் குயிராகி யெவையுமாம்
அமல! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

உலகுக்கு ஆதரவாய், உயிர்களுக் கெல்லாம் உயிராகி, எவ்வகைப்
பொருளும் ஆகிய தூய பொருளே! எமது தேவனே!’ வேதாந்த சித்தாந்த நெறிகளை ஆராய்ந்தறிந்து, ஒழுக்கத்தெளிவு, விஞ்ஞானத்தின்
நிறைவு, கல்விச் சிறப்பு, நற்பண்பு,
உண்மையாகிய செல்வம்,
உறுதியான வீரம் (மிகுவீரம்), தலைமை,
அருள், யோக நெறியிலே மேன்மை (என்பவற்றுடன்), சமாதி கூடுதலிற் பயிற்சி
யுடையவராய், சட்சமய நிலைமையும் மேலான மந்திரம் மேலான தந்திரம்
என்பவற்றின் நிலையையும், பிற மதங்களையும், நெறிப்படி அறிந்து, உண்மை
நெறியினராகி, தூய பொருளின் நிலையை அறிந்து,
உலகப் பற்று நீங்கியவராய், உண்மையின்ப அறிவுருவினராய், பற்றற்ற நெறியில் நிற்போர்.
நல்லாசிரியராவார்.

இங்குக் கூறியவை நல்லாசிரியரின் இயல்பு.

Leave a Reply