ராசிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி துவக்கம்

செய்திகள்

ஜயந்தி விழா ஜன., 2 அன்று துவங்குகிறது. இரவு 7 மணிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெண்ணை சாற்றப்படுகிறது. ஜன., 3 அன்று காலை வெண்ணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்வாமி அருள்பாலிக்கிறார். மாலை 6 மணிக்கு புண்யாக வாஜனம், கலச ஆவாஹணம், வேத பாராயணம், ஆஞ்சநேய ஸ்கஸ்ராம அர்ச்சனை நடக்கிறது.

ஜனவரி 4ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுதர்சனம், அஷ்டலட்சுமி மற்றும் குபேர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், மந்திர புஷ்பம் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 6 மணிக்கு ஆஞ்சநேயர் ஸ்வாமிகளான மூலவர், உற்சவர், நவமாருதி, மற்றும் ராமர்பாதம் விஷேச திருமஞ்சனம் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை, மஹா தீபராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Leave a Reply