திருமலை – திருப்பதி பஞ்சாங்க கணித மாநாடு

செய்திகள்

காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் மற்றும் பல மடாதிபதிகள் குத்துவிளக்கு ஏற்ற மூன்று நாள் நிகழ்ச்சிகள் துவங்கியது.

இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பஞ்சாங்க கணிதர்கள், தர்ம சாஸ்திர வல்லுநர்கள், அறிவியலாளர்கள், கணிதவல்லுனர்கள், விஞ்ஞானிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

இதில் திருக்கணிதம் மற்றும் சித்தாந்த பஞ்சாங்கத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை களைவது, கிரக நிலைகளில் உள்ள வேறுபாடுகளை கணித வழியில் தீர்ப்பதுபோன்ற விஷயங்கள் மிக ஆழமாக விவாதிக்கப்பட்டது.


தமிழகத்தின் சார்பாக திரு. குட்டிசாஸ்திரிகள், திரு. இராமநாத சாஸ்திரிகள், திரு. நரசிம்மன், திரு. மஹாலிங்கம் அய்யர், திரு. கோபாலகிருஷ்ணன், திரு. விஜயராகவன், திரு. மும்பை சீனுவாசன், திரு. மாத்ருபூதம், திரு. இரமன சர்மா, திரு. சுரேஷ், திரு. ராஜன் அய்யங்கார், பாம்பு பஞ்சாங்க வெளியீட்டாளர்கள். திரு. கணேஷ்குமார், திரு. சிவக்குமார், மற்றும் அடியேன் உட்பட கலந்துக்கொண்டோம்.

மிகசிறப்பான முறையில் சர்வதேச தரத்துடன் நிகழ்ச்சிகள் செயலாளர். திரு. கோவிந்தஹரி அவர்களால் திட்டமிடப்பட்டு தன்னார்வ தொண்டர்களால் மிக நேர்த்தியாக செயல்படுத்தப்பட்டது.

தங்கும் விடுதி, சுவையான உணவு, அருமையான போக்குவரத்து இப்படி மிகவும் தரமாக திட்டமிட்டு நிகழ்ச்சி படைக்கப்பட்டது


காஞ்சி ஜெகத்குரு சங்கராச்சார் அவர்கள் தனது உடல்நிலையைகூட பொருட்படுத்தாமல் நிகழ்ச்சி அரங்கத்திற்கு தினமும் தவறாமல் வருகை தந்து நிகழ்ச்சி முடியும் வரையில் இருந்து ஊக்கமளித்தது மிகவும் சிறப்பான ஒருதகவல்.

மதிப்பிற்குரிய E.B. சாஸ்திரி அவர்கள் வயதையும் பொருட்படுத்தாது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது சிந்தனைகளை பகிர்ந்துக்கொண்டது மிகவும் பயனாக அமைந்தது.

செய்தி மற்றும் படங்கள்: பாலு.சரவண சர்மா
தகவல்: www.prohithar.com https://www.prohithar.com/panchangasadas/index.html

 

Leave a Reply