
திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் ஸ்ரீ ராம நவமி விழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரம நிர்வாகி நீதியரசர் ஆர். எஸ். ராமநாதன் கூறுகையில்,
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் வருகின்ற 2.4.2022 முதல் 10.4.2022. வரை ஸ்ரீ ராமநவமி விழா நடைபெற உள்ளது.
இந்த நாட்களில் காலையில் வால்மீகி ராமாயணம் மூல பாராயணமும் மாலையில் ராமாயண சொற்பொழிவு நடைபெற உள்ளது.
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஸ்ரீ. உ. வே. யதீந்திர கனபாடிகள், ஸ்ரீ மகேஷ் பட் ஆகியோர் பாராயணம் செய்ய உள்ளனர்.




பாராயண விவரம்
2.4.22 ஸ்ரீ ராம ஜனனம்
- 4.22 கௌசல்யா மங்களாசாசனம்
4.4.22 அயோத்தியா காண்டம்
5.4.22 ஆரண்ய காண்டம்
- 4.22 கிஷ்கிந்தா காண்டம்
- 4.22 சுந்தர காண்டம்
- 4.22 கும்பகர்ண வதம்
- 4.22 ராவண வதம்
- 4.22 ஸ்ரீராம பட்டாபிஷேகம்
என பாராயணங்கள் நடைபெற உள்ளது.
6.4.22 முதல் 10.4.22 வரை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சொல்லின் செல்வர் பி.என். பரசுராமன் அவர்கள், “திருப்புகழில் ராமாயணம் ” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுவார்கள்., ஆன்மீக அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுக் கொண்டார்
- செய்தி: எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை