பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

செய்திகள்

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து மலைக்கோயிலில் இருந்து பண்பொழி நகருக்கு திருக்குமரனை அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு ஐந்துபுளி மண்டபத்தில் சுவாமி அழைப்பும், தொடர்ந்து மண்டபத்தில் இருந்து வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி அழைப்பும் நடந்தது. நேற்று மாலை 6.30 மணிக்கு பண்பொழி கீழரத வீதியில் அன்னக்கொடி ஏற்றும் விழா நடந்தது.

திருமலைக்குமரனுக்கு அரோகரா கோஷம் முழங்கிட பலத்த கரகோஷத்டனும், வாணவேடிக்கைககள், மேளதாளம் முழங்கிட அன்னக் கொடியேற்றப்பட்டது. மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும், சுவாமி திருவீதி உலா, கலைநிகழ்ச்சிகள், சமய சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.அன்னக்கொடியேற்று விழாவில் அறங்காவலர்குழு தலைவர் அருணாசலம், அறங்காவலர்கள் காசிதர்மம் துரை, கிளாங்காடு மணி, இடைகால் வேல்சாமி, கணபதி வேல்சாமி, பண்பொழி டவுன் பஞ்.,தலைவர் மங்கள விநாயகம், கோயில் செயல் அலுவலர் ராஜாமணி, கடையநல்லூர் தொகுதி இளைஞர் காங்., தலைவர் பண்பொழி வினோத், கரிசல் முத்தழகு, ரமணி, கோயில் பணியாளர்கள், மண்டகப்படி, கட்டளைதாரர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்பொழி, அச்சன்புதூர், வடகரை, தென்காசி, செங்கோட்டை, புளியரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் சிறப்பு பெற்ற சண்முகர் எதிர்சேவை வரும் 17ம் தேதியும், தேரோட்டம் 19ம் தேதியும், 20ம் தேதி தைப்பூச திருவிழாவும் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *