பாகவதமும், பாகவதரும்..!

செய்திகள்
bhagavatham - Dhinasari Tamil

ஸ்ரீ வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிகவும் பிரியமான சேவகர் ஆவார்,

வக்ரேஷ்வர பண்டிதர் நதியா மாவட்டம், திரிவேணிக்கு அருகிலுள்ள குப்தபரா என்னும் கிராமத்தில் பிறந்தார்.

அனுதினமும் ஸ்ரீவாச பண்டிதர் எனும் பக்தரின் வீட்டில் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் ,மற்றும் நாட்டிய நாடகங்கள் நடைபெறும். அதில் பங்கு கொண்டு நடித்தபோது, ​​வக்ரேஷ்வர பண்டிதர் தலைமை நடனக் கலைஞர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் தொடர்ந்து எழுபத்திரண்டு மணி நேரம் அற்புதமாக சங்கீர்த்தனத்திற்கு நடனமாடினார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நவதீப சங்கீர்த்தன லீலைகளில், ​​வக்ரேஷ்வர பண்டிதர் அந்த குழுவில் ஒரு முக்கியமான பாடகராகவும் நடனக் கலைஞராகவும் இருந்தார்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் நவதீப லீலைகளில் வக்ரேஷ்வர பண்டிதரும் முக்கியமானவராவார் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு சன்யாசம் ஏற்றுக்கொண்ட பிறகு, அவருடன் ஜகந்நாத் பூரிக்கு வக்ரேஷ்வர பண்டிதரும் உடன் சென்றார். பூரியில் மகாபிரபு வசித்த காலத்தில், அவர் தொடர்ந்து பல சேவைகள் புரிந்து அவருடன் வாழ்ந்து வந்தார்.

வக்ரேஷ்வர பண்டிதரின் கருணையால், மகாப்பிரபுவின் கோபத்திலிருந்து வைஷ்ணவ அபராதம் செய்த, தேவானந்த பண்டிதர் விடுவிக்கப்பட்டார்.

தேவானந்த பண்டிதர் ஶ்ரீமத் பாகவத செற்பொழிவாற்றுவதில் நிபுணராக இருந்தார். ஒரு நாள் ஸ்ரீவாச பண்டிதர் இவரின் சொற்பொழிவை கேட்க சென்றார்.

பாகவத புராணதில் ஆழ்ந்து தன் நிலை மறந்து கண்களில் ஆனந்த கண்ணீருடன் பரவச நிலை அடைந்தார். இதை கண்ட தேவானந்த பண்டிதரின் சிஷ்யர்கள் இவரின் பரவச பாவத்தை தவறாக புரிந்து கொண்டு ஏதோ சொற்பொழிவில் இடையூறு செய்கிறார் என்று எண்ணி ஸ்ரீவாச பண்டிதரை மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர்..

இந்த சம்பவம் தேவானந்தருக்கு முன்னால் நடைபெற்ற போதிலும், பக்த ஸ்வரூபமாக இருந்த பாகவதத்தை புறக்கணிக்கும் இந்த செயலிலிருந்து அவர் தனது மாணவர்களைத் தடுக்கவில்லை..

இச்செயலினால் தேவானந்த பண்டிதர் ஒரு சுத்த பக்தனின் அபராதத்திற்கு (தூய பக்தரை அவமதித்த குற்றத்திற்கு )ஆளானார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தன் பிரியமான பக்தனுக்கு ஏற்பட்ட அவமதிப்பை கேள்விப்பட்டு தனது பக்தர்களிடம் அறிவுரை வழங்கினார்.

பாகவத புராணத்தை படிப்பவர்களுக்கு பக்தரான பாகவதரை மதிக்க தெரியவில்லை என்றால் அவர்கள் அபராதிகள் (குற்றவாளிகள் ). . மேலும் பல ஜென்மங்கள் பாகவத புராணத்தை படித்தாலும் கிருஷ்ண ப்ரேமை அடைய மாட்டார்கள் என்றும் உரைத்தார்.

பக்தர்-பாகவதமும் புத்தக – பாகவதமும் வேறுபட்டவை அல்ல. பாகவத புத்தகத்தைப் புரிந்து கொள்ள, ஒருவர் முதலில் -பாகவதத்திற்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும். எனவே பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு
தேவானந்தரை புறக்கணித்து, அவருக்கு கருணை காட்டவில்லை.

Leave a Reply