இரும்பாடி முத்தாலம்மன் கோவில் வைகாசி  விழா முளைப்பாரி உத்ஸவம்!

செய்திகள்
irumbadi amman mulaippari utsav - Dhinasari Tamil

இரும்பாடி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் வைகாசி  விழா முளைப்பாரி எடுத்து பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாலம்மன் வைகாசி விழா நடைபெற்று வருகிறது.  கடந்த 14ஆம் தேதி கொடியேற்றம் சாமி சாட்டுதல் நிகழ்வு நடைபெற்று பக்தர்கள் வேண்டுதலை துவக்கினர். 

தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அம்மன் மேளதாளத்துடன் அதிர்வேட்டுகள் முழங்க கிராம முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.  பல்வேறு ஒப்பனைகளுடன் அலங்கரிக்கப்பட்ட முளைப்பாரியினைச் சுமந்து பெண்கள் வலம் வந்தனர்.

 தொடர்ந்து, வைகை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, அருள்மிகு முத்தாலம்மன் விழா குழுவினர் மற்றும் இரும்பாடி கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Leave a Reply