பழனியில் கொடியேற்றத்துடன் துவங்கியது தைப்பூசத் திருவிழா!

செய்திகள்

பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசம் முக்கியமான விழாவாகும். இச் சிறப்பு மிக்க தைப்பூசத் திருவிழா பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, இரவு கிராமசாந்தி பூஜை நடைபெற்றது. உற்சவர் சன்னிதியில் ஆறு கலசங்கள் வைத்து சிறப்பு மயூர யாகம் நடத்தப்பட்டது. சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு, யானை முன்னே செல்ல கோயிலை வலம் வரச் செய்யப்பட்டு, கொடிக்கட்டி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.

முன்னதாக, மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்புக் கட்டப்பட்டது.

கொடியேற்றம் முடிந்த பின் கொடியேற்ற இடத்துக்கு எழுந்தருளிய தம்பதி சமேதர் முத்துக்குமாரசாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

https://www.dinamani.com/edition/story.aspx?artid=361662

Leave a Reply