பல லட்சம் பக்தர்கள் மகரஜோதி தரிசனம்

செய்திகள்

இதைதொடர்ந்து மகரசங்கிரமபூஜை மாலை 6.44 மணிக்கு நடைபெற்றது. இதையடுத்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை இரவு 7.00 மணிக்கு நடைபெற்றது.

ஐயப்பன் தங்க ஆபரணங்களில் ஜொலித்தார். அந்த சமயத்தில் பொன்னம்பலம் மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் மூன்று முறை காட்சி தந்தார். அப்போது அங்கு கூடிருந்த பல லட்சம் பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க சரணம் ஐயப்பா என்று எழுப்பிய ஓசை விண்ணைப் பிளந்தது.

மகரஜோதியை முன்னிட்டு சன்னதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுவாமி சன்னதியில் நுழைய அடையாள அட்டை, சிறப்பு அட்டை இல்லாத யாரும் அனுமதிக்கப்படவில்லை.

சுவாமி சன்னதியின் தேவஸ்தான போர்டு தலைவர் ராஜகோபாலன்,நாயர், கூடுதல் தலைமைச்செயலாளர் ஜெயக்குமார், நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன், எஸ்.பி.வேணிகோபால் உள்ளிட்டோர் மகரசங்கிரமபூஜையில் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவரும் மகரஜோதியை தரிசனம் செய்த மகிழ்ச்சியில் சபரிமலையை விட்டு மலை இறங்கினார்கள்.

ரூ.133 கோடி வருமானம்: சபரிமலை ஐயப்பனுக்கு மண்டலபூஜை,மகரவிளக்கு பூஜையையொட்டி 2 மாதங்களில் ரூ. 133 கோடியே 15 லட்சம் வருமானம் வந்துள்ளது என்று தேவஸ்தான போர்டுதலைவர் ராஜகோபாலன் நாயர் தெரிவித்தார்.

பக்தர்கள் அவதி: பம்பையில் இருந்து போதுமான பஸ் வசதியில்லாத காரணத்தினால் பக்தர்கள் பலர் மிகுந்த அவதிப்பட்டார்கள். கேரள போக்குவரத்துக்கழகம் போதிய அளவுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கவில்லை. இதனால் பஸ்ஸýக்கு பல மணி நேரம் காத்திருந்தும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பக்தர்கள் மிகுந்த அவதிப்பட்டார்கள்.

சபரிமலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதியை வெள்ளிக்கிழமை தரிசிக்கும் ஐயப்ப பக்தர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *