கும்பகோணம் அருகே அறுபத்து மூவர் திருக்கோயில் திருப்பணி தொடக்கம்

செய்திகள்

இதையடுத்து, அறுபத்துமூவருக்கும் அறுபத்து மூவர் திருக்கோயில் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது சண்டேஸ்வரர் முக்தி பெற்ற திருவாய்ப்பாடியில் அமைக்க திருப்பனந்தாள் காசி மட அதிபர் சம்மதித்தார்.

இதையடுத்து, திருவாய்ப்பாடியில் திருப்பனந்தாள் காசி மடத்திற்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கரில் இந்தக் கோயிலை அமைப்பது என்றும், அதைச் சுற்றி அறுபத்து மூவர் சித்திரைக்கூடம், அருங்காட்சியகம், நூலகம், தியான மண்டபம், திருமுறைப்பயிற்சி மையம், சொற்பொழிவு அரங்கம், ஆய்வுமையம், நந்தவனம், மூலிகைத் தோட்டம், தங்கும் விடுதி ஆகியவற்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அறுபத்து மூவர் திருக்கோயில் அமைப்பதற்கான திருப்பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோபூஜை, கஜபூஜை நடைபெற்றது.

தருமபுர ஆதீனம் 26-வது குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமட அதிபர் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், திருமுதுகுன்றம் கல்யாணசுந்தர சிவப்பிரகாச பரமாச்சாரியசுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.

முன்னதாக திருப்பனந்தாள் காசி மடத்திலிருந்து 63 நாயன்மார்களின் விக்ரகங்கள் திருவாய்ப்பாடிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

 

News :http://www.dinamani.com/edition/story.aspx?artid=364028

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *