வளர்பிறை பஞ்சமி வாராகி அபிஷேகம்!

செய்திகள்
madurai panchami poojai - Dhinasari Tamil

மதுரை: மதுரை மேலமடை தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் திங்கள்கிழமை நவ. 28-ம் தேதி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு, காலை 9 மணிக்கு வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

இதை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில் வேதியர்களால் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு, அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் ,அபிஷேத் திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும் .

மேலும், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. இத் திருக்கோயிலில், மாதந்தோறும் வளர்பிறை பஞ்சமி அன்று, வராஹி அம்மனுக்கு பக்தர்களால் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.

சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், யாக சனீஸ்வரன், சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெறுகிறது.

Leave a Reply