அச்சன்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

செய்திகள்
achankoil therottam rathothsavam - Dhinasari Tamil

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோயிலில் ஞாயிற்றுக் கிழமை இன்று  தேரோட்டம் நடைபெற்றது. 

ஐயப்பனின் படைவீடு கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவிலில் மண்டல உத்ஸவம் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, புனலூர் கருவூலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணப்பெட்டி ஊர்வலம் டிசம்பர் 16ம் தேதி நடைபெற்றது. மண்டல மகோத்ஸவத்தில்  டிசம்பர் 18,19,20,21 ஆகிய தேதிகளில் உத்ஸவபலி பூஜை நடைபெற்றது. 

இந்த உத்ஸவத்தின் .7,8 ம் நாள் திருவிழாக்களில் (டிச.23, 24 தேதிகளில்)  கருப்பன் துள்ளல் நடைபெற்றது. 9 ம் திருவிழாவான இன்று (டிச.25) தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

அச்சன்கோயிலில் நடைபெறும் இந்த மார்கழி ஆராட்டு உற்சவத்தில் ஒன்பதாம் திருவிழாவில் நடைபெறும் தேரோட்டம் முக்கிய விழாவாகும்  கேரளத்தில் இரு கோயில்களில் மட்டுமே ரதோத்ஸவம் நடைபெறுகிறது.  பாலக்காடு அருகில் உள்ள கல்பாத்தி விஸ்வநாதர் கோயில், அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயில் ஆகிய இரு இடங்களில் மட்டுமே ரதோத்ஸவம் நடைபெறுவது இதன் சிறப்பை உலகுக்குச் சொல்லும்.

அச்சன்கோவில் தேரோட்டம் மிக வித்தியாசமான தேரோட்டம் கேரளாவில் இரண்டு கோவில்களில் மட்டுமே ரத உற்சவம் நடைபெறும் ஒன்று பாலக்காடு அருகே உள்ள கல்பாசி விஸ்வநாதர் கோவில் மற்றொன்று அச்சன்கோவில் அச்சன்கோவில் தேரோட்டம் மார்கழி உற்சவத்தில் ஒன்பதாவது நாளில் நடைபெறும் 

இந்தத் தேர் சிறியது என்றாலும் சக்தி பெரியது. சிறிய தேரில் இரு பக்கமும் மூங்கில் கம்புகளைக் கட்டி முன்பக்கம் மலையாளத்தவரும், தேருக்குப் பின்பக்கம் தமிழர்களும் இருந்து, தேரை இழுக்க மிக வித்தியாசமான தேரோட்டமாக அமைருக்கிறது.  அச்சன்கோவில் அரசனுக்கு காந்த மலையிலிருந்து பக்தர் கொடுத்த  வாள் தங்கத்தினால் ஆனது. இது எடையே பார்க்க முடியாதது. இந்த வாளை கோவில் நிர்வாகி முன்னே எடுத்துச் செல்ல இந்த தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. 

10 ம் திருவிழாவான நாளை சுவாமிக்கு ஆராட்டு திருவிழா நடைபெறும். மறுநாள் 27-12-22 அன்று மண்டல பூஜை. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷேசத்துடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த விழாக்களில் தமிழகத்தில் இருந்தும் கேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Leave a Reply