

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில், பகல் பத்து ஒன்பதாம் திருநாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.
இன்று நம்பெருமாள், அரையர் சேவையில் முத்துக்குறி அபிநயத்திற்காக, முத்தங்கி அணிந்து முத்துக்களின் அழகுடன் காட்சி அளிக்கிறார்.
அதன்படி, ஸ்ரீ நம்பெருமாள், முத்துக்களால் செய்யப்பட்ட அங்கி (முத்தங்கி) அணிந்து, முத்து பாண்டியன் கொண்டை, முத்து கர்ண பத்ரம், முத்து அபயஹஸ்தம், மார்பில் நாச்சியார் – அழகிய மணவாளன் பதக்கம், வெள்ளை கல் ரங்கோன் அட்டிகை, 6 வட பெரிய முத்து சரம், பின் சேவையாக முத்தங்கியுடன், பருத்திப்பூ பதக்கம், தொங்கல் கைகளில் சாற்றி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.