அறந்தாங்கி காசி விசுவநாதர் கோயிலில் குடமுழுக்கு

செய்திகள்

புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த இந்தக் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.

இந்தக் கோயிலுக்கு நீண்டகாலமாகக் குடமுழுக்கு நடைபெறமல் இருந்த நிûலாயில், இப்போது, திருப்பணிக் குழுத் தலைவர் கே.வி.ஆர். ராஜ்குமார், வி. சுப்பிரமணியன் செட்டியார் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் மூலம் கோயில் திருப்பணிகள் மேற்கோள்ளப்பட்டது.

இதில் கோயில் விமானம், ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ முருகப் பெருமான், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ சண்டிகேசுவரர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சூரியன், ஸ்ரீ சனிபகவான், ஸ்ரீ நவக்கிரகங்கள், ஸ்ரீ நந்திதேவர் ஆகிய சந்நிதிகள் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, புதிய கொடி மரம், மஹா மண்டபம், மடப்பள்ளி ஆகியவை கட்டப்பட்டன.

இதையடுத்து, திங்கள்கிழமை காலை 9.05-க்கு மேல் 9.55-க்குள் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை அனைத்து பூஜைகளுடன் தொடங்கி, வெள்ளிக்கிழமை காலை முதற்கால யாகசாலை பூஜையும், சனிக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றன.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால பூஜையும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை எஸ். வேலவசுப்பிரமய சிவம், சி. பிச்சாண்டீஸ்வர குருக்கள், பி. குமரகுருபர சிவாச்சாரியர்களும் செய்து வருகின்றனர்.

 

http://www.dinamani.com/edition/Story.aspx?artid=372225

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *