சிதம்பரம் சுப்ரமணியர் கோயில் தேரோட்டம் கோலாகலம்..

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

To Read it in other Indian languages…

IMG 20230404 WA0007

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே உள்ள பாண்டியகம் கோயில் (சுப்ரமணியர் கோயில்) உற்சவம் கடந்த மார்ச் 27-ம் தேதி திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் வருடாந்திர பங்குனி உத்திர உற்சவம் தொடங்கியது.

ஏப்.4-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ சுப்ரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. கீழவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது.

உற்சவத்தை முன்னிட்டு ஏப்.4-ம் தேதி லட்சார்ச்சனையும் நடைபெற்றது ஏப்.5-ம் தேதி புதன்கிழமை காலை ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பின்னர் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply