ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

செய்திகள்

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தில் கோயில் கொண்டு அருள்பாலிப்பவர் அருள்மிகு செங்கமலத்தாயார் சமேத ஸ்ரீ வீழிவரதராஜப் பெருமாள். இக்கோயிலில் ஏற்கெனவே கிழக்கு நோக்கி உள்ள ராஜகோபுரம் மட்டுமல்லாது, மேற்கு நோக்கிய வாசலில் புதிதாக 32 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.

கோயிலுக்குள் சக்கரத்தாழ்வார், ஹயக்கிரீவர் சன்னதிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இரு ராஜகோபுரங்கள் மற்றும் மூலவர் விமானம் உள்ளிட்ட 11 விமானங்களுக்கு பிப். 7ஆம் தேதி காலை 9 முதல் 10.30-க்குள் குடமுழுக்கு செய்யப்படவுள்ளது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை ஆச்சாரியார் அழைப்புடன் தொடங்கி யாகசாலை மண்டபத்தில் கும்பஸ்தாபனம் உள்ளிட்டவை நடத்தி முடிக்கப்பட்டது. சனிக்கிழமை காலை யாகசாலை மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் கால பூஜை நடைபெற்றுது. இரவு 2-வது கால பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை இரு கால பூஜையும், திங்கள்கிழமை காலை நிறைவு பூர்ணாஹூதி தீபாரானை முடிந்து 9 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. காலை 10.15 மணிக்கு விமானங்கள், ராஜகோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுத் தலைவர் ராஜாராம் செட்டியார், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலர் ஆர். சௌரிராஜன், பொருளாளர் எஸ். கலிவரதன், உறுப்பினர் ஆர். ரவிச்சந்திரன் மற்றும் ஆலோசனைக் குழுவை சேர்ந்த பி.கே.எஸ்.வி. பாலகுரு, டி. கண்ணன், வி. துளசிராமன் குழுவினர் செய்து வருகின்றனர்.

http://www.dinamani.com/edition/Story.aspx?artid=372245

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *