கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

செய்திகள்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருத்தலங்களில் திண்டுக்கல் மாரியம்மன் திருக்கோயிலும் ஒன்று. இக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் மாசிப் பெருந்திருவிழா முதன்மையானது.

கடந்த வியாழக்கிழமை பூ அலங்காரம், வெள்ளிக்கிழமை பூச்சொரிதல், ஞாயிற்றுக்கிழமை சாமி சாட்டுதல் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றம் நடந்துள்ளதை தொடர்ந்து இனி திருவிழா முடியும் காலம் வரை நகரில் உள்ள மாவு மில்களில் மிளகாய் அரைப்பது நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது…

News: http://www.dinamani.com/edition/Story.aspx?artid=373804

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *