ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் கோயில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

செய்திகள்

இதைத்தொடர்ந்து, சேஷ வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம், சிம்ம வாகனம், திருக்கல்யாண உத்சவம், வெண்ணைய் தாழி உத்சவம், தேர் ஆகியவற்றில் பெருமாள் வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறார்.

பிப். 18-ம் தேதி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் பல்வேறு கோயில்களின் பெருமாள்கள் சங்கமிக்கும் தீர்த்தவாரியில் நித்ய கல்யாணப் பெருமாள் பங்கேற்கிறார். அம்மையார் கோயிலுக்கும், ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலுக்கும் பயன்படக்கூடிய அம்மையார் குளம் புனரமைக்கப்பட்டு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் ஸ்ரீ கயிலாசநாதர் கோயில் தெப்போத்சவம் நடைபெற்றது. தற்போது சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் தெப்போத்சவம் பிப். 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ்.கே. பன்னீர்செல்வம், கோயில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி, ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்துள்ளனர்.

News: http://www.dinamani.com/edition/Story.aspx?artid=373838

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *