அச்சன்கோயில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு

செய்திகள்

அச்சன்கோயிலில் தர்மசாஸ்தா வன அரசனாக பூர்ணம்மாள் புஷ்கலாதேவியுடன் அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோயில் மூல விக்ரகம் தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி, ஒவ்வோர் ஆண்டும் அச்சன்கோயில் தர்மசாஸ்தாவுக்கு இந்த நாளில் புஷ்பாஞ்சலி வழிபாடு தமிழக, மலையாள பக்தர்களால் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை வந்த இந்த நாளில் தர்சாஸ்தாவுக்கு பகலில் சிறப்பு களபாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு, உச்சிகால பூஜை நடத்தப்பட்டது. கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள துர்க்கை, பத்திர காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மாலையில் சீவேலி சடங்குகள் மற்றும் தீபாராதனை முடிவு பெற்றதும் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்லி வழிபாடு தொடங்கி இரவு வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து திரளான ஐயப்ப பக்தர்கள இந்த வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News: https://www.dinamani.com/edition/Story.aspx?artid=373987

Leave a Reply